நகைச்சுவையும் விநோதமும் கலந்த ‘ஜில் ஜங் ஜக்’ பாடல்கள்

 

jung 1

ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள் இருந்தால் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகும் . ஏதாவது ஒன்றுதான் சூப்பர் ஹிட் ஆகும் .

ஆனால் எல்லாப்  பாடல்களுமே  ஹிட் ஆன படமான ஜில் ஜங் ஜக்  வந்திருக்க , அதன் இசை அமைப்பாளர் என்ற கம்பீரப் பெருமையோடு புன்னகைக்கிறார்  விஷால் சந்திரசேகர் .

விஷால் சந்திர சேகர் இசையில் உருவாகி இருக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் பாடல்கள் எவ்வளவு ஹிட் என்பதை, படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு  கல்லூரிகளுக்கு செல்லும்  படக் குழு,

 நேரடியாக  உணர்ந்து புல்லரித்து நிற்கிறது .

படததின் எல்லாப் பாடல்களுக்கும்  ஆடிப் பாடி தங்கள் சந்தோஷத்தை தெரிவிக்கும் மாணவர்களும் ரசிகர்களும் , ஷூட்  த குருவி பாடலுக்கு மட்டும் ஒரு படி  மேலே போய் கொண்டாடித் தீர்க்கிறார்கள் .

இப்படியாக படம் வருவதற்கு முன்பே பாடல்களாலேயே  பெருத்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும்  ஏற்படுத்தி இருக்கும் படம்  ஜில் ஜங் ஜக்.

ஆனால் ஆரம்பத்தில் இந்தப்  படத்தில்,  பாடல்களே வைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்பதும்,  பின்னணி இசைக்கு மட்டுமே….

jung 3

படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரை அணுகினார் என்ற உண்மையும்,

எத்தனை பேருக்கு தெரியும் ?

ஆனா , அதான் மாமு fact டு !

ஒரு நிலையில் படத்துக்கு ஒரே ஒரு பாடல் வேண்டும் என்று தீர்மானித்த இயக்குனர் தீரஜ் , விஷால் சந்திரசேகர் போட்டுக் கொடுத்த அந்த ஒற்றைப் பாட்டில் மனம் மயங்க ,

கடைசியில் படத்தில் இத்தனை பாடல்கள் வந்து சேர்ந்தன .

இது பற்றிப் பேசும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் , ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் சித்தார்த் , இயக்குனர் தீரஜ் வைத்தி இருவருமே,

இந்தப் படத்துக்கு வினோதமான நகைச்சுவைப் பாடல்கள் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக  இருந்தனர்

.எனக்கும் அது பிடித்து இருந்தது . ஒவ்வொரு பாடல் உருவாக்கமும் தந்த சவாலை நான் விரும்பி ஏற்றுக் கொண்டேன் .

1940 களில் உருவான ஆப்பிரிக்கோ அமெரிக்கப் இசைப் பின்னணியில் அமைந்த   ரிதம்ஸ் அண்ட் புளூ பாணியில்,  ”ஷூட் த குருவி…” பாடலை அமைத்து அதில் ராதாரவியின் குரலும் வருவது போல அமைத்தேன் .

மேற்கத்திய நாடோடிப் பாடல் பின்னணியில் ”டோமரு.. லார்டு…” பாடலை அமைத்தேன் .

jung 2அதி தீவிர  ஜாஸ் இசையான ரெட்ரோ ஜாஸ் இசைப் பாணியில் ”ரெட் ரோடு…” பாடல் உருவானது .

1990 களில் இங்கிலாந்தில் தெற்கு லண்டனில் உருவான டப் ஸ்டெப் இசையோடு ஜாஸ் இசையைக் கலந்து காஸனோவா பாடலை அமைத்தேன் .

உண்மையை சொல்லப் போனால் இப்படி ஒரு படத்துக்காகத்தான் நான் காத்திருந்தேன் . எனது இசையை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு சித்தார்த் மிகப் பெரும் உதவியாக இருந்தார். 

பின்னணி இசையிலும் முழு உழைப்பை கொடுத்துள்ளேன் .

இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலையும் பல்வேறு சந்தர்ப்பங்களில்  சல்மான் கான் , ஜெயம் ரவி, விஷால் மற்றும் ஆர்யா  ஆகியோர் ஆன்லைனில் வெளியிட்டதும்,

எனக்கு மிக சந்தோஷமான விஷயம் ” என்கிறார் , விஷால் சந்திர சேகர்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →