
சில்வஸ்டர் ஸ்டேல்லன், ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர்,ஜெட்லி , ஜேசன் ஸ்டேதம், டால்ஃப் லண்ட்க்ரன் போன்றோர் இணைந்து நடிக்க சில்வஸ்டர்ஸ்டேல்லன் இயக்கிஅசத்திய எக்ஸ்பெண்டபிள்ஸ் முதல் பாகம் ……
இவர்களோடு சக் நாரீஸ் புரூஸ் வில்லிஸ் மற்றும் வான் டேம் ஆகியோர் இணைய சிமன் வெஸ்ட் இயக்கிய எக்ஸ்பெண்டபிள்ஸ் இரண்டாம் பாகம்
ஆகியவற்றை தொடர்ந்து …
டேவிட் கெல்லஹம் எழுதிய மூலக் கதைக்கு சில்வஸ்டர் ஸ்டேல்லன் கதை அமைக்க …
சில்வஸ்டர்ஸ்டேல்லன், ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர்,ஜெட்லி , ஜேசன் ஸ்டேதம்,ஹாரிசன்ஃபோர்ட், அன்டோனியோ பண்டாரஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்க, பேட்ரிக் ஹிக்ஸ் இயக்கத்தில் எக்ஸ்பெண்டபிள்ஸ் மூன்றாம் பாகம்தயாராகி திரையைத் தொட துடித்துக் கொண்டு இருக்கிறது .
இந்த மூன்றாம் பாகத்தின் சிறப்பம்சம் … பிரபல ஆஸ்திரேலிய ஆக்ஷன் ஹீரோவான மெல்கிப்சன் இதில் வில்லனாக வருவதுதான்.
கதை இன்னாவாம் ?.
அநியாயத்தைதட்டிக் கேட்டு ஒடுக்க உருவாக்கப்பட்ட இந்த எக்ஸ்பெண்டபிள்ஸ் குழுவைஆரம்பித்த ஒருவரே இப்போது கொடுங்கோல் வில்லனாக மாறி விட , அவரை இந்தசில்வஸ்டர் ஸ்டேல்லன், ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர்,ஜெட்லி , ஜேசன்ஸ்டேதம்,ஹாரிசன் ஃபோர்ட், அன்டோனியோ பண்டாரஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் கூட்டணி எப்படி அழிக்கிறது என்பதுதான் படமாம். வழக்கம் ஒருத்தரை காமெடியாக வாரிக் கொண்டு கலகலப்பு ஏற்றுவார்கள்
முக்கிய விஷயம் .. இந்த மூன்றாம் பாகம் முடிவதற்குள் நான்காம் பாகத்துக்கு ப்ளான் பண்ணிவிட்டார்கள்.அதில் புதிதாக இணைபவர் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிரான்சன் !
இங்கேதான் கார்த்திக்கும் பிரபுவும் சேர்ந்து நடிப்பதே கஷ்டமான விசயமா இருக்கே!