ரஸ்க் கணக்காக ரிஸ்க் எடுத்த வில்லன் சூர்யா

thiru 2

‘ 24 படம்  பார்த்த  எல்லோரும் ஒளிப்பதிவாளர்  திருவைக் கொண்டாடுகிறார்கள்’ என்று சூர்யா மனதாரப் பாராட்டும் அளவுக்கு , இந்தப் படத்தில் அசத்தி இருப்பவர் திரு என்கிற திருநாவுக்கரசு .

 பி.சி.ஸ்ரீராமின் சீடரான   திருநாவுக்கரசு ( என்ற ) திருவை “மகளிர் மட்டும்” படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

thiru 4

ஹேராம், ஆளவந்தான் , காதலா காதலா என்று,  வரிசையாக கமல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் திரு . பிரியதர்சன் இயக்கிய காஞ்சிவரம் இவரது மற்ற்றொரு அடையாளம்.

இந்தியில் கரம் மசாலா , பூல்புகல்யா , ஆக்ரோஷ் , க்ரிஷ்3 என்று,  பத்துக்கும் மேற்பட்ட மெகா பட்ஜெட் இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி,  

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளராக பெயர் பெற்று இருப்பவர் . 

thiru 5

ஆறு வருட இடை வெளிக்கு பின் சூரியாவின் “24”  படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் .

“24”  படம் பற்றியும் சூர்யா பற்றியும் உற்சாகமாகப் பேசுகிறார் திரு 

“சூர்யா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் “24” இவ்வளவு சுலபமாக முடிவடைந்து இருக்காது .நல்ல நிலையில் தடையின்றி படப்பிடிப்பு நடத்த,

 படப்பிடிப்புக் குழுவுக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ,  அவை அனைத்தும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் ஒருங்கிணைத்து அளித்து ஊக்குவித்தார் .

thiru 8

பல ஹீரோக்கள் தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொண்டவர்கள்தான் என்றாலும் சூரியா இன்னும் ஒரு படி மேலே போய், தனது டெடிக்கேசனை ப்ராக்டிக்கலாகவும் செயல்படுத்துவார்

இந்தப் படத்தில்  வில்லன் “ஆத்ரேயா”. வில்லன் கதாபாத்திரத்தை மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார், சூரியா.

இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது .இது சினிமாவுக்கு மிகப் பெரிய சவாலாகவும் உள்ளது.. ஆனால் நவீன தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தும் விதமாக கதைகள் அமைவதில்லை.. 

thiru 6

ஆனால் அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக “24” படத்தின் கதைக்களம் அமைந்தது  .இயக்குநர் விக்ரம் குமாரின் நுணுக்கமான திரைக்கதை சிறப்பு அம்சமாக அமைந்தது  .

ஏன் ஆறு ஆண்டு காலம் தமிழில் படம் செய்யவில்லை என்று கேட்கிறார்கள் .ஹிந்தியில் நான் பணியற்றிக்கொண்டிருந்ததால் நேரமின்மை ஒரு காரணம் என்றாலும்,

thiru 1

நல்ல ஒரு படத்துக்காக காத்திருந்தேன் என்பதும் உண்மை.

அந்த ஏக்கம் “24”- ல் நிறைவேறியுள்ளது..

இதற்கு முன் விக்ரம் குமார் தனது  படங்களுக்கு என்னை அழைத்த போதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை,  

விக்ரம் குமார் என்னிடம் கதை சொன்ன வேளையில் நான் அவர் கதை சொல்லும் விதத்தை நான் கூர்ந்து கவனித்தேன் .

thiru 9

கதை சொல்லி முடிந்தவுடன் நான் பதில் எதுவும் சொல்லாமல் செல் போனில் டயல் செய்து கொண்டிருந்தேன்.

அந்த ஒரு நிமிடம், ”என்ன இவர்…?  என்னிடம் பதில் எதுவும் சொல்லாமல் போனை கவனித்து கொண்டிருக்கிறாரே?’ என்று கூட அவர் மனம் வருத்தப்பட்டிருக்கலாம்.

ஆனால் நான் போன் செய்தது சூர்யாவுக்கு அவரிடம் நான் ‘சார் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் இந்தப்  படம் செய்ய வேண்டும’ என்று விக்ரம் குமார் முன்னிலையில் சொன்னேன்.

thiru 7

எனக்கு அவ்வளவு மனநிறைவு இருந்தது .

படத்தை இப்போது முழுவதுமாக பார்த்தபோது அந்த மன நிறைவு இரட்டிப்பானது. ஒரு ரசிகர்கள் மனதில் நீங்காது இடம் பெறப் போகும் நல்ல படம்  இது.

  புதுமையுடன் புது தொழில் நுட்ப யுத்திகள் பலவற்றை பயன்படுத்தி எடுத்துள்ளோம் என்ற திருப்தியை  “24” எனக்கு தந்துள்ளது ” என்கிறார் திரு (என்கிற) திருநாவுகரசு. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →