இயக்குனர் முரளி கிருஷ்ணா வரவேற்க, பாடல்கள் குறுந்தகட்டைநடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக் கொள்ள,
தயாரிப்பாளர் ஜின்னா,, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு பேச எல்லாம் வழக்கமான வைபோகம்தான் .
(படத்தின் முன்னோட்டம் பரபரப்பாகவும் பாடல்கள் மண் மணத் துள்ளலோடு சிறப்பாகவும் இருந்தன )
விழாவில் நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, என்னோட இரண்டாவது படமும் நான் நடிச்ச முதல் படமுமான ஆண்பாவம் படத்தை விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினப்போ,
ஒருத்தர் ‘எல்லாம் நல்லாத்தான்யா இருக்கு. ஆனா நீ ஏன்யா நடிச்ச?’ன்னார். எனக்கு பகீர்னு ஆயிருச்சு.
வேற வழியில்லாம தயாரிப்பாளர் தன்னோடசொத்தெல்லாம் வித்து படத்தை ரீலீஸ் பண்ணினார். பல்லாவரத்துல படம் ஓடுற தியேட்டருக்குப் போயிருந்தேன்.
படமே ரொம்ப டல்லா தெரிஞ்சது. மொத்தமே 20பேர் தான் படம் பார்த்துட்டு இருந்தாங்க. வீட்டுக்கு வந்து எங்கம்மா மடியில படுத்துட்டு ‘என் படத்தை நான் நடிச்சுக் கெடுத்திட்டேன்மா’ன்னு அழுதேன்.
தயாரிப்பாளர் மனசுக்குள்ள அழுதார்.
அன்னைக்கு நைட் ஷோ, அபிராமி தியேட்டர்ல இருந்து என் அஸிஸ்டெண்ட் போன் பண்ணான். ‘அண்ணே, படம் நல்ல “டாக்”அப்டின்னான்.
‘அந்த“டாக்”கைத் தான் நான் காலையில பல்லாவரத்துலயே பாத்துட்டனே’ன்னு சொன்னேன். அவன் மேனேஜர் கிட்ட போனைக் கொடுத்து பேசச் சொன்னான். கூட்டம் எப்டி இருக்குன்னு கேட்டேன்.
ஹவுஸ் ஃபுல்னு சொன்னார்.
நம்ம படத்துக்கு வந்த கூட்டம் இல்ல, படிக்காதவன் படத்துக்கு வந்த கூட்டம், டிக்கெட் கிடைக்காம நம்ம படம் பாக்கிறாங்கன்னு சொன்னார். உடனே கிளம்பி அபிராமி தியேட்டர் போனேன்.
படம் பாத்த கூட்டத்துல ஒருத்தர், “ஏய், நீதான நடிச்சிருக்க”ன்னு கேட்டார். ஆமான்னு தலையாட்டினேன். ஒரு கையெழுத்து போட்டுக் குடுன்னார். போட்டுக் குடுத்தேன்.
இதை ஏன் சொல்றேன்னா, நேர் முகம் படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. இந்த வாய்ப்பு முக்கியமில்லை. இதுக்கு அப்புறம் பார்க்கப் போற விசயங்கள் தான் முக்கியம்.
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க.நேரடியாவே நீ காலி அப்டின்னு பேசுவாங்க. எதையும் மனசுல ஏத்திக்காம உங்க வேலையை மட்டும் கரெக்டா செய்ங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்.
நேர்முகம் படம் பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்ற பொது கூட , அது கலகலப்பான பேச்சாக மட்டுமே இருந்தது .
அடுத்துதான் சிக்கி முக்கிக் கல்லில் நெருப்பெடுத்து சிவகாசி சரவெடியை கொளுத்துவது போல பக்குவமாக பேச ஆரம்பித்து பட்டையைக் கிளப்பினார் சுரேஷ் காமட்சி
“நேர்முகம் ட்ரைலர் பார்க்கும்போது படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது. புதுமுகம் ரஃபி நன்றாக நடிக்கிறவர் என்று தெரிகிறது. இயக்குனர் முரளி கிருஷ்ணா அனுபவம் வாய்ந்தவர்.
அவர் தயாரிப்பாளரைக் காப்பாற்றிவிடுவார் என நம்பலாம். இப் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். இங்கு நிறைய மீடியா சகோதரர்கள் இருப்பதால் முக்கியமான ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும்.
“சேதுபதி” படம் ரீலிசான அன்னைக்கே படம் டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா
இந்திய சினிமா 100வதுஆண்டு விழா கொண்டாடுனப்போ, 10கோடி கொடுத்தாங்க தமிழக முதல்வர். ஏன்னா அவங்க ஒரு நிரந்தர சினிமா கலைஞர். நிரந்தர சினிமா உறுப்பினர்.
சினிமா மேல அவங்களுக்கு அன்பு இருக்கு. அப்படிப் பட்டவங்க இதை நிறுத்தி வைக்கமாட்டாங்க. அவங்க பார்வைக்கு விசயத்தை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கொண்டுபோனாங்களா?
அதுக்கு முயற்சி எடுத்தாங்களான்னு தெரியல.‘ அதே மாதிரி 3 வருசமா,தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழா நடக்கல. அதையும் யாரும் கேட்ட மாதிரி தெரியல.
தேர்தல் நேரத்துல நாடகம் போடக் கூடாதுன்னு சொன்னா நாடகக் கலைஞர்கள் பாதிக்கப்படுவாங்கன்னு நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் கமிஷனரை நேரா பார்த்து பேசுறாங்க. மனு கொடுக்கிறாங்க.
ஆனா, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்காக அப்படி செயல்பட்ட மாதிரி தெரியல. ஒரு படத்துக்கு மானியம் கேட்டு அப்ளிகேசன் கொடுக்கிறப்போ,
அதற்கு கட்டணமாக ஒவ்வொரு படத்துக்கும் அந்த படம் சார்பாக ரூ.1000/-தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அரசுக்கு கடந்த எட்டு வருசமா போயிட்டிருக்கு.
அதனால மானியம் கேட்டு விண்ணப்பிக்கிறது அந்தத்துறை சம்பந்தமான அரசு அதிகாரிகளுக்கு நல்லாவே தெரியும்.
எல்லாப் படத்தையும் பார்த்தாச்சுன்னும் சொல்றாங்க. ஆனா, ஏன் எட்டு வருசமா நிறுத்தி வச்சிருக்காங்க அப்டிங்கிறதுக்கு எந்த விபரமும் தெரியல.
எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இனியாவது நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும்
–என்பதுதான் என் வேண்டுகோள் என்று பட படார் வெடிகளாக வெடித்தவர் அடுத்து போடுவதுதான் அணுகுண்டு ….
“இந்திய சினிமா 100வதுஆண்டு விழா கொண்டாடுனப்போ, படங்களுக்கான மானியம் தருவதற்கு என்று சொல்லித்தான் அந்த பத்து கோடி ரூபாய் வாங்கப்பட்டு உள்ளது.
ஆனால் மானியம் தரப்படவில்லை . கடந்த எட்டு வருடமா படம் எடுத்தவங்கள்ல மானியத்துக்கு விண்ணப்பித்த ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும்
ஆயிரம் ரூபாய் மேற்கொண்டு செலவானதுதான் வேடிக்கை ” என்கிறார் ஒரே போடாக .
இத்தனை வெடிகளும் சம்மந்தப்பட்ட யார் காதிலாவது குசுகுசு பேச்சு போலவாவது கேட்குமா?