
சூர்யா அப்படிப் பேசுவார் என்று…. பேசுவதற்கு முன்பு சூர்யாவே கூட நினைத்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை . ஆனால் பேசிவிட்டார் !
அது விளையாட்டுக்கு சொன்னதா இல்லை வில்லங்கமாகவே சொன்னதா என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்து குசுகுசு பட்டிமன்றம் .
அஞ்சான் படத்துக்கான மொபைல் கேம்ஸ் வெளியீடு சமயத்தில் கார்த்திக்கு நடந்த ஒரு சம்பவம்தான் சூர்யாவின் அந்த பேச்சுக்கு காரணம் .
வேறொரு படப்பிடிப்பில் இருந்த அவரது தம்பி கார்த்தி ஃ புட் பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட விஷயம் சில பத்திரிக்கைகளில் கொஞ்சம் ‘சீரியசான’ செய்தியாக வந்திருந்தது சூர்யாவை சூடாக்கி விட்டது .
ஆனால் அதற்காக கார்த்தி பற்றி சூர்யா அப்படி பேசி இருக்க வேண்டுமா என்பதுதான், சூர்யாவின் சம்பளம் அளவுக்கு பெரிய கேள்வி .

“என் தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அவங்கவங்க எல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு எழுதறாங்க. ஏன்னே தெரியல.. எல்லாரும் என் தம்பிய குறிவச்சு எழுதறாங்க …” என்பதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும் . ஆனா flow அவரை விடவில்லை..
“அவனுக்கு சாதாரண ஃபுட் பாய்சன்தான் . எந்தப் பிரச்னையும் இல்லை ” என்பதோடாவது நிறுத்தி இருக்கலாம் . ஆனால் பேச்சு overflow ஆகி மேற்கொண்டு “அவன் ஆஸ்பத்திரில நர்சுகளை எல்லாம் கொஞ்சிக்கிட்டு ஜாலியா இருக்கான். ஆஸ்பிடல்ல அவன் இருக்குற ரூம் நம்பர் என்ன தெரியுமா? அவனுக்கு பொருத்தமான நம்பர் . அதாவது 420 ” என்று போட்டுத் தாக்க…
‘நாம கூட கார்த்தியை இப்படி தாக்கலையே…’ என்று கான்ட்ரவர்சி கண்மணிகள் எல்லாம் கதறி விட்டார்கள், மானசீகமாக!
“நர்சுகளை கார்த்தி கொஞ்சிகிட்டு இருக்கான் ” என்ற சூர்யாவின், ஒப்பன்… சபை….. ஸ்டேட்மெண்டை,
அந்த 420 யில் சர்வீஸ் செய்யும் நர்சுகளும் அவர்களது குடும்பத்தாரும் எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியலையே …