விஷால் தயாரித்து இயக்கிய பூஜை படத்தை அடுத்து சூர்யாவும் ஹரியும் சேர்ந்து ஒரு படம் உருவாக்க முடிவு செய்திருந்தார்கள். ‘அது சிங்கம் படத்தின் மூணாவது பாகமாக இருக்கும் . அதற்கு பட்ஜெட் ஐம்பது கோடி..’ என்று பளபளப்பான படாடோபமான செய்திகள் எல்லாம் வெளிவந்தன . படத்துக்கு தயாரிப்பாளர் அவராக இருக்கலாம். இந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஏகப்பட்ட பில்டப்பு அப்பு !
ஆனால் எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டது பூஜை படத்தின் ரிசல்ட் !
தீபாவளிக்கு கத்தி மற்றும் பூஜை என்று இரண்டு படங்கள் மட்டுமே வரும் என்று முன்பே முடிவான நிலையில் கத்தி படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்கள் படமே தீபாவளிக்கு வராது என்ற நிலையை உருவாக்கியது .
ஆக, தீபாவளிக்கு நம்ம படம் மட்டும்தான் என்று சந்தோஷமாக இருந்தது பூஜை தரப்பு .
ஆனால் லைக்கா என்ற பேரை மட்டும் ரெண்டே மாநிலத்தில் காவு கொடுத்து விட்டு வெளியான கத்தி , படம் பேசும் விஷயங்களுக்காகவும் விஜய்யின் கேரக்டர் உணர்ந்த நடிப்புக்காகவும் கொண்டாடப்பட ,, கலெக்ஷன் பிச்சிக்கிட்டு பறக்கிறது .
விளைவு ?
மே மாச மத்தியான வெயிலில் பற்ற வைத்து பிடித்த தீவட்டி போல மாறி விட்டது பூஜை . படம் வசூலில் தேறவில்ல.
அதன் விளைவு ?
சூர்யா – ஹரியின் ஐம்பது கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை தயாரிக்க இதுவரை Q வில் நின்ற நிறுவனங்கள் எல்லாம் “நாங்க தயாரிக்கிறோம்னு R சொன்னா” ? என்று கேட்டு S ஆகி விட்டன .
இப்போது மேற்படி படத்தை தானே தயாரிக்க வேண்டிய ஏற்பட்டிருக்கிறது சூர்யாவுக்கு .
இப்படிதான் சினிமாவுல…..
தென்னாப்பிரிக்காவுல தேள் கொட்டினா தேனியில நெறி கட்டும் .