36 வயதினிலே படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது , சூர்யா ஜோதிகா உட்பட்ட படக் குழு . படத்தில் வரும் வசந்தி கதாபாத்திரத்தைப் போலவே…… திருமணத்துக்கு பின் தனது தனித்தன்மையை இழந்த பெண்களின் கனவுகளை மீட்டெடுக்கும் விதமாக….
சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மற்றும் சக்தி மசாலா நிறுவனங்கள் இணைந்து ஒரு உதவித் திட்டத்தை அறிவித்து இருந்தது .
படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவும் திட்டத்தைப் போலவே , ”அகரம் பவுண்டேஷன் மூலமாக பெண்களுக்கு என்றும் ஒரு திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறோம்” என்றார் சூர்யா .
36 வயதினிலே படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு சூர்யா , ஜோதிகா இருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர் .
”ஜோதிகா இனி தொடர்ந்து நடிப்பார். கதாநாயகியாக மட்டும்தான் என்றில்லை. முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிப்பார். வெளிப் படங்களிலும் நடிப்பார்” என்றார் சூர்யா .
தவிர சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கும் கதை ஒன்றையும் கேட்டு இருக்கிறார்களாம் . “அது பற்றி விரைவில் அறிவிப்போம்” என்றார் ஜோதிகா .
வாழ்த்துகள் !