
அம்மாவாக , சகோதரியாக, மனைவியாக , மகளாக, தோழியாக அனைவரின் வாழ்வையும் உயர்த்தி அதற்காக தனது கனவுகளை இழக்கும் பெண்களின் லட்சியக் கனவுகளை 36 வயதினிலே படம் போல சினிமா கதையில் மட்டும் நிறைவேற்றி வைக்காமல் நிஜத்திலும் நிறைவேற்ற 2 D நிறுவனமும் சக்தி மசாலா நிறுவனமும் ஒரு முயற்சியை மேற்கொள்கிறது .
நமக்குத் தெரிந்த சூழலில் ‘இவர் திறமைக்கு வாழ்வில் பெரும் உயரத்தை தொடுவார்’ என்று நாம் நம்பிய பெண் யாராவது….. திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது திறமைகளை மறந்து கனவுகளை கருக்கிக் கொண்டு சின்ன வட்டத்தில் சுருக்கிக் கொண்டு இருப்பது தெரிந்தால் அவரைப் பற்றி எழுதி அனுப்பலாம்.
பரிந்துரைக்கப்படும் பெண் திருமணம் ஆன பெண்ணாக இருக்க வேண்டும். அவரது திறமை , இன்று அவரது நிலைமை பற்றி இரண்டு பக்கங்களில் எழுதி அனுப்ப வேண்டும்.
phone :- 7871279066
Email :- 36vdreams@agaram.in