சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் துள்ளத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியை ஞாபகம் இருக்கா?
கடைசியில் கொலையாளி என்று ராம் குமார் என்ற இளைஞன் சொல்லப்பட்டதும் அவனை போலீஸ் பிடிக்க முயன்றபோது ,
அவன் தற்கொலைக்கு முயன்றான் என்று அம்புலி மாமா கதைகள் வந்ததும் மறக்க முடியுமா என்ன?
அந்த கொலை விவகாரத்தை மையமாக வைத்து அதே பெயரில சுவாதி கொலை வழக்கு என்ற படம் ஒன்று உருவாக்கி இருக்கிறது
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் S.k.சுப்பையா தயாரிக்க, கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிராஎன்பவர் நடிக்க
விஜயகாந்த் நடித்த உளவுத்துறை அருண்விஜய் நடித்த ஜனனம் மற்றும் வஜ்ரம் படத்தையும் இயக்கிய
S.D.ரமேஷ் செல்வன்இயக்கத்தில் உருவாகிறது இந்தப் படம்
படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்கிறார்.
மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் வக்கீல் ராம்ராஜ் வேடத்தில் A.வெங்கடேசும் , செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்தில் பென்ஸ் கிளப் சக்தியும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த், இசை : ஷாம் டி ராஜ்
விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு மற்றும் தற்காப்பு போன்ற படங்களை இயக்கிய R.P.ரவி கதை வசனத்தை எழுதி இருக்கிறார்.
”நிஜ சம்பங்களை படமாக்கும் போது சுவாரஸ்யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு…ஆனால் சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப் பட வில்லை
நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம் பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம்.
மக்களுக்கு தெரிவிக்கப் படாத நிறைய சம்பங்கள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவரின் மனமும் திடுக்கிட்டுப் போகும்.
இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள்” என்கிறார் இயக்குனர்.
சும்மா மெரட்டுங்க !