முதியோர்களின் ஆசைகள் சொல்லும் ‘சீயான்கள் ‘
G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண்வாசத்தை, அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும். கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் வைகறை பாலன், “வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். சீயான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின் வாழ்வை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்தோம். உறவுகளை தூர வைத்து விட்டு இன்ஷியலை மட்டும் கூடயே வைத்துக்கொள்கிறோம். அன்பையும் பாசத்தையும் மறந்து விட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்கள் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், இச்சை இருக்கும். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் …
Read More