
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணில் பட்டவனுக்கு எல்லாம் ஆரம்பத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது . பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு அது ஐந்தாகி கடைசியில் மூன்றானது .
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் அரசே நியமித்த ஜெயின் கமிஷன் ”சந்திரா சுவாமி மற்றும் சுப்பிரமணிய சாமியை விசாரிக்க வேண்டும்” என்றும் ”அவரது கொலைக்கான சதியின் கரங்கள் இத்தாலி வரை நீள்கிறது ”என்பது பற்றியும் கூறியதை எல்லாம் கண்டு கொள்ளாமல் விடுதலைப் புலிகள் தரப்பு மட்டுமே குறி வைத்து அடிக்கப்பட்டது.

இந்த காரணத்தாலும் பொதுவாக தூக்கு தண்டனையே கூடாது என்று கருத்து வலுப்பெற்று வருவதாலும் மேற்படி வழக்கு காரணமாக இப்போது தூக்கின் பிடியில் இருக்கும் முருகன் சாந்தன் பேரறிவாளன் மூவரையும் தூக்குத் தண்டனையில் இருந்து மீட்க பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடக்கின்றன.
ஆனால் அதே நேரம் அவர்களை தூக்குத் தண்டனை நியாயமானது என்று வற்புறுத்தும் நோக்கில் தமிழிலேயே ஒரு படம் உருவாகி வருகிறது .
ராஜீவ் காந்தி கொலை வழக்கை படமாக எடுக்கிறோம் என்ற பெயரில் குப்பி என்ற படத்தை தமிழில் எடுத்து
, அதன் மூலம் இன உணர்வுள்ள தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை அதிகப் படுத்தியவர் கன்னட இயக்குனர் ரமேஷ் .
அடுத்து வீரப்பன் கதையை தமிழில் படமாக எடுக்கிறேன் என்ற பெயரில்
அநியாயப் பொய்களை வீரப்பன் மேல் திணித்து படம் எடுத்தவரும் இவரே .

இப்போது ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எடுக்கிறேன் என்ற பெயரில்
இவர் தமிழில் எடுக்க இருக்கும் புதிய படத்தில் திரைக்கதை ,
ராஜீவ் காந்தி வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகிய மூவரையும்
கண்டிப்பாக தூக்கில் போடவேண்டும் என்று வற்புறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது .
என்ன செலவானாலும் யாரை விலைக்கு வாங்கியாவது இந்தப் படத்தை அப்படியே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அதற்காக டெல்லி அல்ல…
இலங்கை அரசே இருநூறு கோடி ரூபாய் வரை ஒதுக்கி இருக்கிறது என்றும் கூறப்படுவதை கேட்கும்போதுதான் …
இதற்கு பின்னால் உள்ள விபரீத அரசியல் கணக்குகள் விளங்குகின்றன.
பார்ப்போம்.. இந்தப் பண மழையில் இன்னும் எத்தனை சாயங்கள் வெளுக்கப் போகின்றன என்று!