நல்ல துவக்கம்…
சிறப்பான படமாக்கல்…
ஜனரஞ்சகப் பொழுதுபோக்குத் தன்மை..
வியப்பான வியாபாரம்….
ரசிகர்களின் ரசனை மிக்க நம்பிக்கை ..
— போன்ற காரணங்களால்,
விஜய் ஆண்டனி நடித்து வரும் மார்ச் நான்காம் தேதி வெளிவரும் பிச்சைக்காரன் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது ..
இந்த நிலையில் படத்துக்கு வரி விலக்கு வழங்கப்பட்டு இருப்பது படக் குழுவினரை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது .
இது பற்றிக் கூறும் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் ,
“வரிவிலக்கு கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது .
நான்காம் தேதி வெளிவரும் படம் மாபெரும் வெற்றி பெரும் என்பது இப்போதே உறுதியாகி விட்டது .”என்கிறார், கே ஆர் பிலிம்ஸ் சரவணன் , உறுதியாக .