தாய் தந்தை மூவீஸ் மற்றும் ராகதேவி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்க,
பிரபா , அஜய் சனம் ஷெட்டி மற்றும் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், ஆர்.தீபக் ராஜ், மிப்பு, ராம் கிரண், பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா ஆகியோர் நடிக்க
எம்.தங்கதுரை இயக்கி இருக்கும் படம் தகடு
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பி எல் தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தயார்ப்பாளர் பட்டியல் சேகர்,
இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி , பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் செல்வமணி
” இப்போது நிறைய படங்கள் வருகிறது . ஆனால் தியேட்டர்கள் கிடைப்பது இல்லை . இதை சரி செய்ய மாநிலம் முழுவதும் சிறு தியேட்டர்கள் அமைக்கப்படவேண்டும் .
அங்கே டிக்கட் விலை ஐம்பது ரூபாயாக இருக்க வேண்டும் . இப்படி ஆயிரம் தியேட்டர்கள் அமைக்கப்பட்டால் ஒரே நாளில் ஐந்து கோடி வசூல் வரும் . சின்னப் படங்கள் பிழைக்கும் .
தினம் ஒரு படம் கூட ரிலீஸ் செய்யலாம் ” என்றார் .
தயாரிப்பாளர் பட்டியல் சேகர் பேசும்போது
” பெண்களைக் கெடுக்கும் டி வி சீரியல்களை ஒழித்தாலே போதும். யார் யாரை எப்படிக் கெடுப்பது என்பதை சொல்வதே இந்த சீரியல்களுக்கு வேலை .
அவர்களுக்கு சென்சாரும் இல்லை . சீரியல்கள் கட்டுப்படுத்தப்பட்டால் குடும்பங்களும் உருப்படும் . சினிமாவும் உருப்படும் ” என்றார் .
“மக்களின் மனங்களை வென்ற சினிமா டைட்டில்களையும் பாடல்களையும், ஒரு புதுப் படத்துக்கு பயன்படுத்துவதில் அனுமதி வாங்குவது உட்பட பல சிரமங்கள் இருக்கிறது .
ஆனால் டிவி சீரியல்களில் அப்படியே பயன்படுத்துகிறார்கள்” என்றார் பேரரசு .
“பாடல்களும் முன்னோட்டமும் நன்றாக இருக்கிறது” என்றார் அம்மா கிரியேஷன்ஸ் சிவா
பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்கள் படங்களை ரிலீஸ் செய்யத் தேவை இல்லை . ஏனென்றால் அவர்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்கள் எல்லாம் பண்டிகை நாட்கள்தான் .
எனவே பண்டிகை நாட்களை சிறு படங்களுக்கு ஒதுக்க வேண்டும் ” என்றார் படத்தில் நடித்து இருக்கும் ராஜ்கபூர்
” படைப்பாளிகள் தயாரிப்பாளர்கள் மீது எப்போதும மரியாதையோடும் நன்றியோடும் இருக்க வேண்டும் .ஏனென்றால் தயாரிப்பாளர்களை படைக்கும் தயாரிப்பாளர்களே அவர்கள்தான் ” என்றார் விஜயமுரளி .
இடையிடையே எல்லோரும் படத்தையும் வாழ்த்தினார்கள்
மகான் கணக்கு படத்தின் இயக்குனர் சம்பத் ஆறுமுகம் பேசும்போது
” இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திகேயன் எனது படத்தில் பணியாற்றியவர். நல்ல திறமைசாலி .
இந்தப் படத்தில் காடுகளில் மிக அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார் . தங்கதுரை நல்ல நண்பர் . தயாரிப்பாளர் ராஜேந்திரன் குப்புசாமி சிறந்த மனிதர் .
இது என் குடும்ப விழா மாதிரி . இந்தப் படம் வெற்றி பெறவேண்டும் ” என்றார்
“இயக்குனர் தங்கதுரை சொன்ன கதை சிறப்பாக இருந்தது . உற்சாகமாய் படம் எடுத்தேன். இப்போது எல்லோரும் படத்தைப் பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் தயாரிப்பாளர் ராஜேந்திரன் குப்புசாமி
இயக்குனர் தங்கதுரை பேசும்போது” கல்லூரியில் வரலாறு பாடம் படிக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், பாடத்தில் வரும் ஒரு வரலாறு சம்பந்தப்பட்ட ஒரு இடத்தைத் தேடிப் போகிறார்கள்.
அப்போது அவர்கள் தேடிப் போனது இல்லமால் முக்கியமான வேறு ஒன்றைப் பார்கிறார்கள். அது என்ன ?, அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தான் படத்தின் திரைக்கதை.
நகரம் கல்லூரி வாழ்க்கை என்று ஜாலியாகத் துவங்கும் படம் போக காடு , மிஸ்ட்ரி, வரலாறு, பண்டைய நாகரீகம் , செந்தமிழ் என்று பயணிக்கும் . சூப்பர் நேச்சுரல் விசயங்களும் படத்தில் உண்டு
இந்த படத்திற்காக ஆந்திராவில் உள்ள கங்குந்தி கோட்டை என்ற கோட்டையில் முதன் முறையாக படிப்பிடிப்பு நடத்தினோம். அங்கு யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்தியது கிடையாது.
அந்த இடத்திற்கு போக வேண்டும் என்றால் காரில் போக முடியாது. கிட்டத் தட்ட நான்கு கிலோ மீட்டார் நடந்துதான் செல்லவேண்டும். அப்படி கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம்.
மேலும் கிருஷ்ணகிரி, ஒக்கேனக்கல், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது,” என்கிறார் இயக்குனர்.
கல்லூரி வாழ்க்கை, இளமை, கவர்ச்சி என்று ஆரம்பித்து திகில் மர்மம், வரலாற்றுக் காலம் என்று படம்போ கிறது என்பது முன்னோட்டத்தில் அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கிறது .
சார்லஸ் மெல்வின் இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தன
அடுத்த மாதம் திரைக்கு வருகிறது தகடு .