அஞ்சான் படம் வெளியான மறுதினம்.
கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் உள்ள ஒரு இடத்தில் வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூர்யாவை பார்த்த ரசிகர்கள் பலர்,
அஞ்சான் படத்தை கிண்டல் செய்து கமெண்ட் அடிக்க ,
டென்ஷனான சூர்யா அந்த ரசிகர்களை திட்டினார் என்றும்
அப்போதும் ரசிகர்களின் கிண்டல் குறையாத நிலையில் அவமானம் தாங்க முடியாமல்,
படப்பிடிப்பையே கேன்சல் செய்து விட்டு வருத்தத்துடன் போய் விட்டார் என்ற விஷயம் தெரிந்த போது …
ஒரு நொடி சூர்யா மீது பரிதாபம்தான் வந்தது .
ஒரு படம் ஓடவில்லை என்பதற்காக ஒரு நடிகனை இப்படியா அசிங்கப்படுத்துவது என்று,
அந்த ரசிகர்கள் மேல் கோபம் கூட வந்தது.
ஆனால் அஞ்சான் படம் இப்படி ஏமாற்றம் தரும் வகையில் வந்ததற்கே சூர்யா கொடுத்த டார்ச்சர்தான் காரணம் என்ற உண்மை….
இப்போதுதான் ரகசியமான முட்டலுக்கும் மோதலுக்கும் இடையே வெளியே வருகிறது.
விஷயம் இதுதான் !
அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருக்கும் இந்தி நடிகர் வித்யுத்,
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக வந்து நடிப்பால் அசத்தியவர் .
அஞ்சான் படத்தின் திரைக்கதையில் ராஜு பாயின் நண்பன் கதாபாத்திரத்தில் வித்யுத் நடிக்க இருப்பதை சூர்யா விரும்பவில்லையாம் . நடிப்பில் அவர் டாமினேட் செய்து விடுவார் என்ற பயம்தான் அதற்கு காரணமாம்.
அதையும் மீறி அவரே அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தமாகி அவர் நன்றாக நடிப்பதையும் பார்த்த சூர்யா..
ஒரு நிலையில் இயக்குனரை கட்டாயப்படுத்தி வித்யூத் கேரக்டரை சீக்கிரம் கொலை செய்துவிடும்படி வற்புறுத்தினார் என்று படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் கூறுவதுதான்….
இப்போது திரைக்கதையில் உள்ளவற்றை விட சிறப்பான திருப்பமாக இருக்கிறது
தளபதி படத்தில் வருவது போல் கடைசியில்தான் வித்யூத் கதாபாத்திரம் கொல்லப்படுவதாக ஆரம்பத்தில் கதை அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஆனால் சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாகவே இடைவேளையிலேயே அந்தக் கதாபாத்திரத்தை கொன்றுவிட்டதாகவும் தகவல் கசிகிறது இப்போது .
அதனால்தான் அஞ்சான் நோஞ்சான் ஆனது என்பது ஒரு பக்கம் இருக்க, இப்படியெல்லாம் செய்தும் சூர்யாவுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்பதுதான் இன்னும் பரிதாபம்
படம் பார்த்த சினிமா ரசிகர்கள் இப்போதும் வித்யூத்தான் படத்தின் ஹீரோ போலவும் , சூர்யா இரண்டாவது ஹீரோ போல தெரிவதாகவும்….
குறைவான காட்சிகள் இருந்தும் வித்யுத் ஒருபடி மேலே உயர்ந்து டாமினேட் செய்து விட்டார் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சூர்யாவை யார் என்றே தெரியாத ஒருவர் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக வித்யூத் கதாநாயகன் என்றும், சூர்யாவை அடியாள் என்றுதான் கூறுவார்கள் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக வெள்ளிக் கிழமை வெளியாகும் படத்துக்கு வியாழன், வெள்ளியன்றே பத்திரிக்கையாளர் காட்சி போடுவார்கள்.
ஆனால் அஞ்சான் படம் நன்றாக இல்லாத நிலையில் அப்படிப் போட்டால்…
பத்திரிக்கை விமர்சனங்களால் மக்களுக்கு உண்மை புரிந்து விடும் என்பதால் ஞாயிற்றுக் கிழமை வரை மக்கள் நம்பி வந்து காசு கொடுத்து ஏமாந்து போகட்டும் என்று முடிவு செய்து,
ஞாயிறு இரவு பத்திரிக்கையாளர் காட்சியை போட்டார்கள்
அதில் பேசிய சூர்யா “பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் உங்களுக்கு தோன்றியதை அப்படியே எழுதினாலே எங்களுக்கு மிகப் பெரிய பலம். நான் செலக்ட் பண்ணி படம் பண்ணிட்டு வர்றேன், நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்னா… அது நீங்க, பத்திரிகைக்காரங்க நல்லது கெட்டது சொல்லி, ஒரு வேலி போட்டுதான் இந்த இடத்தை காமிச்சிருக்கீங்க. ஆனால், போற தடம்லாம் முள்ளை போடாதீங்க… ” என்றார் .
பத்திரிக்கையாளர்களை உயர்வாக மதிப்பதாக இயக்குனர் லிங்குசாமியும் பேசினார் .
ஆனால் அதில்தான் கூடவே குத்த வச்சு குந்தி இருக்கிறது ஒரு விபரீத வில்லங்கம்
‘தயாரிப்பாளர் இயக்குனர் ஹீரோவுக்கு ஆதரவாக எழுதினால் என்ன? எழுதாவிட்டால் என்ன ? ஐ டோன்ட் கேர்’ என்று சவால் விட்டபடி பத்திரிக்கையாளர்களை மதிக்காமல் ஆணவமாக நடந்து கொள்கிற ஒரு பத்திரிகை தொடர்பாளரை வைத்துக் கொண்டு, இவர்கள் பத்திரிக்கையாளர்களை மதிப்பதாக சொல்வது என்பது கஞ்சா விற்பவன் ஊதுபத்திப் புகையை உடம்புக்கு கெடுதல் என்று சொல்வது போல …
— என்று, ஒரு பத்திரிக்கையாளர் உடனடி கமென்ட் அடித்ததுதான் அசத்தல் அருமை அட்டகாசம்