‘தெறி’ விஜய்யின் செல்ஃபி புள்ளயும் குல்ஃபி புள்ளயும்

theri 7

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்  விஜய், சமந்தா , எமி ஜாக்சன் நடிப்பில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் அட்லி இயக்கி இருக்கும் தெறி படத்தின்,

 பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரம்மாண்ட கோலாகலமாக நடந்தது . 

பொதுவாக இது போன்ற நிகழ்சிகளில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை காரணமாக பத்திரிக்கையாளர்களுக்கு  சரியான இருக்கைகள் கூட அமையாது .
ஆனால்  இதில் அந்தப் பிரச்னையே இல்லாமல் பத்திரிக்கையாளர்களுக்கு தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி இருந்தார்கள்.  சந்தோசம் !
படத்தின் முன்னோட்டமும் சிறு முன்னோட்டமும் கமர்ஷியல் தெறிப்பாகவே  இருந்தது . பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழும்ஸ்கூல்  வேனின் முன்புறக் கண்ணாடியில்,
 ஒரு பள்ளிக் கூட புத்தகப் பை விழுந்து நிற்கும் ஷாட்டில்,  அட்லீயின் ‘டைரக்டோரியல் டச்’ தெரிந்தது 
 முத்துக்குமார் எழுதிய ஒரு மெல்லிசைப் பாடல் மனதை இளக வைக்கிறது . 
போலீஸ்காரர்களின் பெருமையை சொல்லும் ஜித்து ஜில்லாடி பாடலில் ”(போலீஸ்காரரை ) மாமான்னு சொல்றியே . அவரு என்ன உன் அக்கா புருஷனா ?” என்று ஒரு வரி வருகிறது . all police happy happy !
டி.ராஜேந்தர் விஜய்க்காக ஒரு பாடல் பாடி இருக்கிறார் 

theri 1
படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . அது பற்றி நிகழ்ச்சியில் பேசிய மீனா
“விஜய் படத்துக்கு என்று சொன்னபோது என்னைத்தான் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன் . என் மகளை என்றதும் ஆச்சர்யம் . யோசித்து முடிவெடுத்தோம்” என்றார் .
நைனிகா நன்றாக நடித்து இருப்பது பாடல்கள் , டிரைலர் , மேக்கிங் வீடியோக்களில் தெரிந்தது . 
படத்தில் பிரபு ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார் . பிரபு தன் பேச்சில் ” நான் இந்தப் நடித்து இருப்பதை விட ,
அப்பா நடித்த தங்கப் பதக்கம் படத்துக்கு வசனம் எழுதியவரும் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனருமான மகேந்திரன் இந்தப் படத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார் . அது எனக்கு ரொம்ப சந்தோஷம் ” என்றார் . 
நடிகராகவும் ஆகிவிட்ட ஜி வி  பிரகாஷ்குமாருக்கு இது இசையமைப்பாளராக ஐம்பதாவது படம். ” இது விஜய் சார் படமாக அமைந்ததில் சந்தோஷம். அமைத்துக் கொடுத்த அட்லீக்கு நன்றி “என்றார் . ஜி வி பி 
theri 4
நிகழ்ச்சிக்கு சமந்தா வரவில்லை . 
ஆனால் சமத்தா மேடைக்கு வந்த ஏமி ஜாக்சன்,  ஆங்கிலத்தில் தயார் செய்து வந்த உரையை பேசிவிட்டு,  விரைவில் தமிழ் பேசுவேன் என்று சொல்லி விட்டுப் போனார் . 
இயக்குனர் மகேந்திரனை பேச அழைப்பதற்கு முன்பு அவர் பற்றிய ஒரு விவரணைப் படம் திரையிடப்பட்டபோது அரங்கமே மரியாதையில் சிலிர்த்தது. 
மகேந்திரன் பேசும்போது ” என்னை நடிக்க தாணு அழைத்தார் . எனக்கு யோசனையாக இருந்தது . அப்போது அவர் சொன்ன விசயத்தை இங்கே சொல்ல கூச்சமாக உள்ளது . ஆனாலும் சொல்ல வேண்டி உள்ளது .
‘உலகத்துக்கு தமிழ் சினிமாவை காட்டியவர் நீங்க . உங்களை உலகத்துக்கு காட்ட ஆசைபடறேன்’ என்று சொன்னார் . அவர் அன்புக்காக ஒத்துக் கொண்டேன் .
இயக்குனர் மகேந்திரன், வில்லனாக !
இயக்குனர் மகேந்திரன், வில்லனாக !

மிகப்பெரிய நடிகர் மிக நல்ல மனிதர் விஜய் . அவர் படத்தில்  நடிப்பது சந்தோசம் . அட்லி மிகப் பெரிய திறமைசாலி . அவருக்கு இன்னும் நிறைய உயரங்கள் காத்திருக்கு ” என்றார் . 

எஸ் தாணு பேசும்போது ” யார் படத்தில் ரஜினி சாரை ஒரு சிறு வேடத்தில் நடிக்க வைத்தேன் . அதற்கு முன்பே பைரவி படத்துக்காக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்தேன்.
இப்போது அவர் நடிக்கும் கபாலி படத்தை எடுத்துக் கொண்டு இருப்பது ஒரு பெருமை என்றால் , இன்னொரு சூப்பர் ஸ்டாரான விஜய்யை வைத்து துப்பாக்கியும் அடுத்து இப்போதும் தெறியும் எடுப்பது ரொம்ப பெருமை .
விஜய் ஒரு தங்கமான மனிதர் . அவர் எனக்கு கால் ஷீட் கொடுத்தால் தொடர்ந்து அவரை வைத்து பல படங்களை எடுக்க நான் தயார் . 
என் கோரிக்கையை ஏற்று நடித்துக் கொடுத்த மகேந்திரன் சாருக்கு நன்றி.  
அட்லீயிடம் உனக்கு இசை யார் வேணும் ஏ ஆர் ரகுமானா ? என்று கேட்டேன் . அதற்கு அட்லீ எனக்கு ஜி வி பிரகாஷ்குமார் வேணும் என்றார் . அவ்வளவு  நட்பு .
theri 3
அதற்கேற்ப அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளார் பிரகாஷ் குமார் . 
அட்லி மிகப் பெரிய திறமைசாலி . அவர் படத்தின் முதல் பாதியை சொல்லி முடித்த போதே , படம் ஹிட் . ரெண்டாம் பாதி சொல்லவே வேணாம் . ஷூட்டிங் போ என்று சொல்லி விட்டேன் .
அவரும் படத்தை சிறப்பாக எடுத்துள்ளார் ” என்றார் .
இயக்குனர் அட்லீ  தன் பேச்சில் ” ராஜாராணி முடிந்த உடன் மூன்று கதைகள் தயார் செய்தேன் . என் அன்புக்குரிய விஜய் டி வி மகேந்திரனிடம் சொன்னபோது அவர் தேர்ந்தெடுத்த லைன்தான் இந்தக் கதை .
விஜய்க்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்  சொல்ல என் கருத்தும் அதுவாகவே இருந்தது . 
விஜய் சாரிடம் கதை சொல்ல நேரம் வாங்கி அவர் வீட்டுக்குப் போனேன் . விஜய் சாரின் மனைவியான  சங்கீதா அக்காவுக்கு எனது ராஜா ராணி ரொம்ப பிடித்த படம்.
அவர் எனக்கு வாழ்த்து  சொல்லி விஜய் சார் அறைக்கு அனுப்பினார் . விஜய் சார் கதை கேட்டு ஒகே சொல்ல,  அப்படி ஆரம்பித்த இந்தப் படம் இன்று இந்த அளவுக்கு வந்துள்ளது . 
theri 5
தாணு சார் மாதிரி ஒரு சிறப்பான புரடியூசரை பார்க்கவே முடியாது . ஒரு காட்சிக்கு பத்து கார் வேண்டும் என்றால் ‘ஏன் தம்பி பத்து? ஐம்பதா எடுத்துக்கோ’ என்பார். அவர் இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கவே முடியாது. 
நம்மில் பல பேருக்கு மணிரத்னம் இன்ஸ்பிரேஷனா இருப்பார் . அந்த மணிரத்னத்துக்கே இன்ஸ்பிரேஷன் மகேந்திரன் சார் . அவர் என்னை மனசார பாராட்டியதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது  ” என்றார் . 
விஜய் தன் பேச்சில் ”  பொதுவா ஆடியோ விழாவில் இசை அமைப்பாளரைதான் விழா நாயகன் என்பார்கள் . ஆனால் பல படங்களின் நாயகனான ஜி வி பிரகாஷ் இந்தப் படத்தின்  இசை அமைப்பாளர் .
ரொம்ப நல்ல பாட்டுகள் கொடுத்து இருக்கார். 
படத்தில் ரெண்டு ஹீரோயின்கள் . செல்பி புள்ள சமந்தாவும் குல்பி புள்ள ஏமியும் . 
theri 2மகேந்திரன் சார் படங்கள்ல நடிக்க முடியலையே என்ற வருத்தம் எனக்கு உண்டு . அதை என் படத்துல அவரை நடிக்க வச்சு தீர்த்துக்கிட்டேன்னுதான் சொல்லணும் .
டிஸ்கவர் சேனல்ல பார்ப்போம் . மான் கூட்டத்தில் நுழையும் புலி ஒருமானை கரெக்டா குறிவச்சு வளைச்சு தனிமைப் படுத்தி தனதாக்கிக்கும். அந்த மான்தான் வெற்றி என்றால் அந்தப் புலிதான் கலைப் புலி .
அவர் எப்படியும் வெற்றியை தனதாக்கிக் கொள்வார். அவர் எடுக்கும் படங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும்.
என் படத்தைப் பத்தி இதுக்கு மேல நானே என்ன பெருமையா சொல்வது ? என் ரசிகர்களுக்கு ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறேன் . ஒரு தோல்விக்கு பின்னாடி ஆயிரம் காரணம் இருக்கலாம்.
ஆனால் ஒரு வெற்றிக்குப் பின்னாடி ஆயிரம் தோல்விகள் இருக்கும் . எனவே வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள் ” என்றார் . 
பேச்சின் இடையே சீனத் தலைவர் மாவோவை ரஷ்யத் தலைவர் என்று விஜய் சொன்னது மெல்லும் வாய்களுக்கு சம்பா அவலாகி விட்டது .
சரி விடுங்க விஜய் , திருஷ்டியே பரிகாரம் ஆகட்டும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →