ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராதா & இராம. நாராயணன் நல்லாசியுடன் என்.ராமசாமி தயாரிக்க, அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி -ஐஸ்வர்யா ராஜேஷ் இணையர் நடிக்கும் படம் ஆறாது சினம் .
மலையாளத்தில் ப்ருத்வி ராஜ் நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்ற. ‘மெமரீஸ்’ படத்தின் ரீமேக் இது.
‘ஈரம்’, ‘வல்லினம்’ போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் அறிவழகன்.
இயக்குனர் அறிவழகன் படம் பற்றி கூறும் போது, ‘காவல்துறை அதிகாரியாக அருள்நிதி நடிக்கிறார். இசை அமைப்பாளர் எஸ்.எஸ். தமன் திருக்குறளின் குறள்களை பாடலாக இசையமைத்து தந்துள்ளார்’ என்றார்.
‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் எழுதிய கதைக்கு அறிவழகன் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியுள்ளார். 39 இடங்களில் ‘ஆறாது சினம்’ படமாக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பைத் தூண்டும் படமான ஆறாது சினம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது .