இந்தியில் சஞ்சனா சிங்

IMG_5159

தமிழில் விஞ்ஞானி உள்பட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும் சில படங்களில் ஒரு பாடல் ஆட்டம் , ஓரிரு காட்சிகள் நடிப்பு என சிறு சிறு கதாபாத்திரங்கள் என்று….. கிடைக்கும் வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்பவர் நடிகை சஞ்சனா சிங் .

IMG_5155

அவரது தொடர் தேடலின் விளைவாக இப்போது இந்திப் படம் ஒன்றில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘தோடா லுஃப்ட்  தோடா இஷ்க்’ . அதாவது கொஞ்சம் காதல் கொஞ்சம் ஜாலி என்று பெயர் .  சச்சின் குப்தா என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதோடு , பரத் பன்சால் , விவேக் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து தயாரித்தும் இருக்கும் படம் இது .

IMG_5154

இந்தியில் பல படங்களில் ஹீரோவாகவும் காமெடியனாகவும் நடித்த ராஜ்பால் யாதவ் , இந்தி தொலைக்காட்சித் தொடர்கள் நடிகரும் சினிமா நடிகருமான ஹித்தேன் தேஜ்வானி  மற்றும் சுஷ்மிதா முகர்ஜி , நேஹா பவர் , இவர்களுடன் சஞ்சனா சிங் முதன் முதலில் இந்தியில் நடிக்கும் படம் இது .

படத்தில் வரும் மேகி என்ற பாடலுக்கு சஞ்சனா சிங் இடுப்பை ஒரு மாதிரி வித்தியாசமாக அசைத்து நன்றாக ஆடி இருக்கிறார் .

IMG_5148

ஜூலை பத்தாம்  தேதி வெளிவர இருக்கும் இந்தப் படத்துக்காக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது , ராஜ்பால் யாதவ்,ஹித்தேன் தேஜ்வாணி , நேஹா பவர் , இவர்களுடன் சஞ்சனா சிங் அடங்கிய படக் குழு . உடன் நடிகர் ரியாஸ்கான் . அவரும் படத்தில் !

IMG_8255

“காமெடி நடிகரான நீங்கள் தமிழில் நடிக்க வந்தால் என்ன கேரக்டரில் நடிக்க விரும்புவீர்கள்? என்று ராஜ்பால் யாதவிடம் கேட்கப்பட்டபோது

IMG_8648

” நான் முதலில் ஹீரோ. அப்புறம் காமெடியனாகவும் நடிக்கிறேன் . முன்புதான் ‘இவர் ஹீரோ…. இவர் காமெடியன்…இவர் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்..’ என்று பிரிந்து இருந்தது . இப்போது எல்லாரும் எல்லா கேரக்டரும் நடிக்கிறார்கள். நானும் அப்படிதான் ” என்றார் .

அதையே ஓட்டிப் பேசிய சஞ்சனா சிங்

IMG_5187

” நான் ஒரு படத்தின் செகண்ட் ஹீரோயினாக நடித்தேன் . ஒரு படத்தில் ஐட்டம் சாங் ஆடினேன் . அதனால் என்னை ஐட்டம் சாங் நடிகை என்று யாரும் முத்திரை குத்தக் கூடாது . நான் வில்லியாக நடிப்பேன். காமெடியாக நடிப்பேன் .ஹீரோயினாக நடிப்பேன்  நான் ஒரு நடிகை .அதுதான் முக்கியம் ” என்றதோடு

“இந்த தோடா லுஃப்ட்  தோடா இஷ்க் படம் சம்மந்தப்பட்டவர்கள் தமிழில் நடித்தால் நான் மிகவும் சந்தோஷப் படுவேன் ” என்றார் .

IMG_5204

பொதுவாக படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் எல்லோரும் வரிசையாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள் .

IMG_5192

ஆனால் சஞ்சனா சிங்கின் பிறந்த நாளையொட்டி (?) இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர் மாதிரி ஒரு கேக் செய்து அதை வெட்டி… அவர்கள் மட்டும் சாப்பிட்டார்கள் .

IMG_5194

குடும்பத்தோடு பார்க்க முடிகிற காமெடி படமாம் இது. ஸ்டில்களை பார்த்தால் … படம் பார்க்கும் நேரத்தில் ஒரு குடும்பம் உருவாகும் போல இருக்கே ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →