”சூர்யாவுக்கு பயப்படும் தெலுங்கு ஹீரோக்கள்” – கள்ளமில்லா நாகார்ஜுனா

thozha 6
பிவிபி சினிமாஸ் தயாரிக்க , நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி படிபள்ளி, தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படத்தின் தமிழ் வடிவம்  தோழா .
தெலுங்கு படத்தின் பெயர் ஊப்பிரி .  The Intouchables என்ற பிரெஞ்சுப் படத்தின் அனுமதி பெற்ற மறு உருவாக்கம் இது .
விழாவில் படம் சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி நடிகர் சிவகுமார் , கலைப்புலி எஸ் தாணு, டி.சிவா, நடிகர் சூர்யா, நடிகர் சங்கம் சார்பில் பொன் வண்ணன் , குட்டி பத்மினி, லலிதகுமாரி,
இயக்குனர்கள் மகிழ் திருமேனி , இறுதிச் சுற்று சுதா கொங்கரா, அட்லி , தயாரிப்பாளர்கள் கே.ஏ .ஞானவேல் ராஜா, சசிகாந்த் ,  தனஞ்செயன், மனோபாலா  உள்ளிட்ட,
 ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர் 
நீல வண்ண லேசர் உருவத்தில் T H O Z H A என்ற எழுத்துக்களோடு  முடியும் நடனத்தோடு விழா துவங்கியது 
நடிகை பூர்ணா , சுஜா வாருணி உட்பட பலர்  ஆடிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன 
thozha 5
கோபி சுந்தர் இசையில் உருவான  ஏழு பாடல்களுக்கும் தனித் தனி டீசர் வெளியிடப்பட்டு ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு பிரபலம் வெளியிட்டு படக் குழுவை வாழ்த்திப் பேசினர். 
“பிவிபி நிறுவனம் , நாகர்ஜுனா , கார்த்தி ,தமன்னா என்று மிக சரியானவர்கள் இணைந்து இருக்கும் படம் இது . எதையுமே பிரம்மாண்டமாக  செய்வதில் வல்லவர்கள் பிவிபி நிறுவனத்தினர் .
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் . எனது வாழ்த்துகள் ” என்றார் கலைப்புலி எஸ் தாணு .
தயாரிப்பலட் டி  சிவா தமன்னாவை lucky charm என்று புகழ்ந்தார் . “மும்பையில் இருந்து வந்து உழைத்து அவர் அடைந்திருக்கும் உயரம் பாராட்டுக்குரியது “என்றார் . 
“கார்த்தியோடு பருத்தி வீரன் படத்தில் நடித்த பெருமை எனக்கு உண்டு . மிகச் சிறந்த நடிகராக அவர் உயர்ந்து கொண்டு இருக்கிறார் . நாகர்ஜுனா சார் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல , சிறந்த மனிதரும் கூட.
சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள் “என்று கூறி,  தோழா படத்தையும் வாழ்த்தினர் பொன்வண்ணன் 
thozha 99
“நாகார்ஜுனாவோடு ஒரு தெலுங்குப் படத்தில் நடித்த பெருமை எனக்கு உண்டு . மிகச் சிறந்த மனிதர் அவர் ” என்று சொன்ன குட்டி பத்மினி , கார்த்தியையும் படக் குழுவையும் வாழ்த்தினார் 
“நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் நான் . அந்த வகையில் இந்த தோழா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து  கொண்டது சந்தோசம் தருகிறது ” என்றார் லலிதா குமரி .
நாகர்ஜுன் சார் நடித்த இதயத்தை திருடாதே படத்தை சின்னப் பையனாக பார்த்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. அவர் இன்று எங்கள் கார்த்தியோடு  ஒரு படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது .
எதையும் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் செய்யும் பி வி பி அதே போல இந்தப் படத்தையும் தயாரித்து உள்ளது தெரிகிறது . படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் 
மணிரத்னம் இயக்கி சூர்யா நடித்த ஆயுத எழுத்து படத்தில் கார்த்தியும் தானும் உதவி இயக்குனராக பணியாற்றியதை குறிப்பிட்டுப் பேசிய இயக்குனர் சுதா
thol
” அப்போது எல்லாம் கார்த்தி எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். மணிரத்னம் சார் அதை பயங்கரமாக கிண்டல் செய்வார்.
 கார்த்தி இப்படி உடலை செதுக்கி ஒரு நடிகராக உயர்வார் என்று நான் அப்போ நினைக்கவே இல்லை . அவரது முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் .
எனது இறுதிச் சுற்று படம் வெளிவர பிவி நிறுவனம் பல உதவிகள் செய்தன. அதற்கு நன்றி ” என்றார் . 
நடிகர் சிவகுமார் தன் பேச்சில் ” 1940களில் தமிழ்நாட்டில் வெளியான தேவதாஸ் என்ற தெலுங்குப் படம் பட்டி தொட்டியெல்லாம் சக்கைப் போடு போட்டது . அதன் ஹீரோ நாகேஸ்வரராவ் . அவரது தீவிர ரசிகன் நான் .
அந்த நாகேஸ்வர ராவின் மகன்தான் இன்று நம்மிடையே இருக்கும் இந்த நாகார்ஜுனா . நாகேஸ்வரராவின் மகனோடு அவரது ரசிகனான எனது மகன் நடிப்பது எனக்கு பெருமை ” என்றார் 
இசையமைப்பாளர் கோபி சுந்தர் பெசும்போது “கார்த்தி நாகார்ஜுனா நடிக்கும் படத்துக்கு இசை அமைத்தது போல , சூர்யா சாரின் படத்துக்கும் இசையமைக்க வேண்டும் எனது எனது ஆசை ” என்றார் 
வம்சி படிபள்ளி
வம்சி படிபள்ளி

படத்தின் இயக்குனர் வம்சி  “பொதுவாக ரெண்டு ஹீரோவை வைத்து இயக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் நாகார்ஜுனா சார் , கார்த்தி சர் இருவரும் அவ்வளவு நட்புடன் பழகியதால் எந்தப் பிரச்னையும் இல்லை .

ஆனால் கார்த்தியும் தமன்னாவும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் . ஆனால் அது நடிப்பில் சாதிப்பதற்கான சண்டை” என்றார் 
தமன்னா தனது பேச்சில் ” எல்லோருக்கும் நன்றி . இந்த வாய்ப்பு அளித்த இயக்குனர் , தயாரிப்பாளர் பிவிபி அனைவருக்கும் நன்றி , நாகர்ஜுனா சாரோடும் கார்த்தியோடும் நடித்தது மகிழ்வான விஷயம்.  
கார்த்தியோடு போட்டி போடுவேன் . ஏன்னா அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது . . யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அவர்களோடுதான் போட்டி போட வேண்டும் ” என்றார் .
கார்த்தி பேசும் போது,. “இந்தப் பள்ளியில் தான் நானும் அண்ணன் சூர்யாவும் படித்தோம் . ஆச்சர்யம் என்ன  என்றால் இந்த பள்ளிக்கு கிரிக்கெட் ஆட வந்திருப்பதாக இப்போது  என்னிடம் நாகர்ஜுனா சார் சொன்னார் . 
 ஒருவருக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத இரண்டு நண்பர்கள் அவர்கள் சம்மந்தப்பட்ட ஒரு பெண் ஆகிய கதாபத்திரங்களைக் கொண்டது இந்த தோழா படம்.  
thozha 7
நானும் நாகர்ஜுனா சாரும் இப்போது உண்மையிலேயே அப்படியே ஆகி விட்டோம் .  ஹைதராபாத்தில் அவரது ஸ்டுடியோவில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது . 
சைக்கிள் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு . அங்கேயும் ஒட்டினேன் . அவரிடம் பேசும்போது ”எதற்கு இவ்வளவு ஸ்பீட் பிரேக்கர்ஸ் போட்டு இருக்கீங்க/” என்றேன்.
 சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் சைக்கிள் எடுத்துக் கொண்டு போனால் , ஒரு ஸ்பீட் பிரேக்கரையும் காணவில்லை . எனக்காக உடனே எல்லாவற்றையும் ஆள் வைத்து தூக்கி விட்டார் .
அவர் என் மீது கொண்ட அன்புக்கு வேறு என்ன சொல்ல வேண்டும் ?” என்றார் .
நாகர்ஜுனா பேசும்போது ” நான் சென்னையில் பிறந்தவன்.எனவே நானும் சென்னைக்காரன்தான். 
இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம் . கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம் .
கோபி சுந்தர்
கோபி சுந்தர்

படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள் .

அப்போது எனக்கும்  எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும் . 
இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா ?
சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு . குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல .
சூர்யாவின் படம் தெலுங்கில்  டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள் . அவ்வளவு பெரிய மாஸ் அவர் .
அவரது அடுத்த படம் 24- என்னுடைய வாழ்த்துகள் ” என்றார் , கள்ளமில்லா வெள்ளை மனதோடு !
அது மட்டுமல்ல கார்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி , இதயத்தை திருடாதே படத்தில் அவர் பேசிய ‘ஓடிப் போலாமா?” வசனத்தை பேசி அரங்கை அதிர வைத்தார் . 
thozha 4
குட்டி ஹெலிகாப்டர் பறந்து வந்து படத்தின் பாடல்கள் அடங்கிய  தகடை அளிக்க, பாடல்களை வெளியிட்டுப் பேசிய சூர்யா ” எனது 24 படம் பற்றி நிறையப் பேர் அரங்கில்  குரல் கொடுக்கிறீர்கள் .
இன்னும் இரண்டு வாரத்தில் படத்தின் டீசர் வருகிறது . அதுவரை பொறுமை 
இப்போது தோழா பற்றிப் பேசுவோம் .
எல்லோருக்கும் எனது வாழ்த்துகள். நாங்கள் படித்த பள்ளியில் நட்பின் பெருமை சொல்லும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது . 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பற்றி அடிக்கடி கார்த்தி வியந்து சொல்வார். கதை , திரைக்கதை, பாடல்கள், படம் எடுக்கப்பட்ட விதம் அனைததையும் பற்றிப் பாராட்டிப் பேசிக் கொண்டே இருப்பார் .
படப்பிடிப்பின் சூழல் உற்சாகமாக இருந்தால் அந்தப் படமும் நாம் எதிர்பார்ப்பதை விட ஒரு மேஜிக் போல நன்றாக வரும் . இந்தப் படம் நன்றாக வந்திருப்பதற்கு அந்த சூழலும் ஒரு காரணம் என்பது புரிகிறது . 
அயன் படத்தில் கூட நடித்தது முதலே பார்த்து வருகிறேன் . தமன்னா  சிறந்த உழைப்பாளி மற்றும் திறமைசாலி . அவரது முயற்சியும் உழைப்பும்தான் அவரை உயர்த்தி இருக்கிறது .
thozha 3
கோபி சுந்தரின் பாடல்கள் எல்லாமே மிக சிறப்பாக இருக்கிறது . விரைவில் ஒரு படத்தில் அவரோடு சேர்வேன். 
 எங்கள் நாகர்ஜுனா சார் .. எப்பேர்ப்பட்ட மிகச் சிறந்த மனிதர் !
”வாழ்க்கை என்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும் . அதை சந்தோஷமாக எதிர்கொண்டால் பிரச்னை ஓடிவிடும்’ என்பார் . சொல்கிறபடியே வாழ்பவர் .
அதனால்தான் இன்னும் இவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறார் . வாழ்க்கையைப் பற்றிய அவரது இந்த அற்புதமான பார்வை ,
நாகர்ஜுனா சாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டு,  பின்பற்ற விரும்பும் விஷயம் “என்றார் . 
நன்றி உரையாற்றிய தயாரிப்பாளர் பரம் வி பொட்லுரி
பரம் வி பொட்லூரி
பரம் வி பொட்லூரி
“தோழா ஒரு தமிழ் படம் . இதில் நடித்து இருக்கும் கார்த்தி தமிழ் . நாகர்ஜுனா மற்றும்  நாங்கள் தெலுங்கு .  இசையமைப்பாளர் கோபி சுந்தர் மலையாளம் .
தமன்னா மும்பை .. அந்த வகையில் இது இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் படம் ” என்றது , சூப்பர் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →