பிவிபி சினிமாஸ் தயாரிக்க , நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி படிபள்ளி, தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படத்தின்,
தமிழ் வடிவமான தோழா படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு !(தெலுங்கு வடிவத்தின் படத்தின் பெயர் ஊப்பிரி . The Intouchables என்ற பிரெஞ்சுப் படத்தின் அனுமதி பெற்ற தழுவல் படம் இது .
கவனிக்க. தழுவல்தான் மறு உருவாக்கம் அல்ல !)
வரவேற்றுப் பேசிய படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜீவ் காமினேனி ” நாகர்ஜுனா, கார்த்தி என்று…. தமிழ் தெலுங்கு மொழிகளின் இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து இந்தப் படத்தை எடுத்தது ,
எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் எல்லோரின் மனசிலும் உள்ள தோழமை உணர்வை வெளிப்படுத்தும் ” என்றார் .
தேசிய விருது வென்றவரும் படத்தின் எடிட்டருமான கே.எல். ப்ரவீன், இந்த நிகழ்ச்சியில் பேசும்போது “ மெட்ராஸ் படத்துல என் எடிட்டிங்கை பார்த்து இயக்குனர் வம்சி ரொம்ப இம்ப்ரஸ் ஆகிப் பாராட்டினார் .
அதனால்தான் இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார் .
ஒவ்வொரு காட்சியிலும் நாகார்ஜூனா வெளிப்படுத்தின எமோஷனலான நடிப்பைப் பார்த்து, நான் இப்போ அவரோட தீவிர ரசிகர் ஆயிட்டேன்.
மறுபக்கம் கார்த்தி ஒட்டுமொத்த படத்திலும் சரி ஷூட்டிங்கிலும் சரி தன்னோட குசும்பு கொப்பளிக்கும் நடிப்பால கலகலன்னு சிரிக்க வைச்சதையும் மறக்க முடியாது” என்றார்.
அடுத்து பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, “’தோழா’ படத்துல கார்த்தி ஹீரோவாக மட்டும் இல்லாமல் ஒரு ஆர்வமுள்ள உதவி இயக்குநரை போலவும் இருந்து எல்லோரையும் உற்சாகப்படுத்தியதை மறக்க முடியாது.
பாடலை எழுதும் போது, ‘இந்த வரியை இப்படி எழுதலாமா> இந்த வார்த்தை வந்தால் நல்லா இருக்குமா?’ என ரொம்பவே உற்சாகப்படுத்தினதை மறக்க முடியாது.
இந்தப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் உள்மனதிற்குள் இருக்கும் நம் ஆன்மாவைத் தொடும் பாடல்களாக வந்திருக்கின்றன.
மற்ற பாடல்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பாடல்களாக இருக்கும்.
நாகார்ஜூனா அவர்களுக்கு என் தந்தை ‘ரட்சகன்’ படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற மெகா ஹிட் பாடலை எழுதியிருந்தார்.
தற்போது நானும் நாகார்ஜூனா அவர்களுக்கு ஒரு பாடலை எழுதியிருப்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
விவேக் பேசும்போது “என்னோட முப்பது வருஷ சினிமா வாழ்க்கையில் ‘ஹேண்ட்சம்’ நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடிக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
ஆனால் அவரோடு சேர்ந்து நடிக்கிற மாதிரியான காட்சிகள் எனக்கு எதுவுமில்ல. கார்த்தி மிகச் சிறந்த நண்பன் . இந்தப் படத்துல நான் நடிக்கனும்னு விரும்பி என்னை அழைத்தவர் அவர்.
அவர் அன்பை மதித்து இதில் நான் நடித்தேன் ” என்றார்
கார்த்தி, தன் பேச்சில் “நல்ல படம் நடிக்கணும்னு நமக்கு ஒரு தேடல் இருக்குமே. அந்த தேடலில் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்புதான் ‘தோழா’.
உண்மையைச் சொல்லணும்னா, நல்ல கதையில நடிக்கிறதுக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன். என்னோட தேடல் வீண் போகல. ‘தோழா’வோட ஒரிஜினல் வெர்ஷனை பார்த்தப்ப,
அதை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி என்னால பண்ணமுடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. ஆனால் டைரக்டர் வம்சி செம புத்திசாலி.
நமக்கு ஏற்றமாதிரி கதையை மிக அழகாக, அதனோட எமோஷன் குறையாம எடுத்திருக்கார்” என உற்சாகமானார்.
நாகர்ஜுனா “என்னுடைய சினிமா கேரியர்ல ‘தோழா’ படம் ஒரு மைல்கல் படமாக இருக்கும்னு சொல்லலாம் . அது மட்டுமில்ல என் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம்.இது.
சில வருடங்களுக்கு முன்பு நானும் என் மனைவி அமலாவும் ‘InTouchables” ஃப்ரெஞ்ச் படத்தைப் பார்த்தேன். இந்த மாதிரி ஒரு அருமையான படத்தை ஏன் இங்கே ரீமேக் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு.
அப்படியொரு உணர்வுப்பூர்வமான படம். அந்தப் படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, நான் சந்திக்கிற நண்பர்கள்கிட்டயெல்லாம் ‘InTouchables’ படத்தைப் பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.
என்ன ஆச்சர்யம் ! அதே படத்தில் நான் நடிக்கணும்னு கேட்டு வந்தார் வம்சி .
அதுதான் தோழா . படத்தை நல்லபடியா உருவாக்கி இருக்கோம்.
எனக்கு பிரெஞ்சு படத்தை பார்த்தப்போ கிடைச்ச உணர்வு பல மடங்கு அதிகமா உங்களுக்கு தோழா பாக்கும்போது கிடைக்கும்
இன்னொரு விஷயம் ‘தோழா’ படத்துல நான் நடிக்கிறதுல என் குடும்பத்துல யாருக்குமே விரும்பமில்ல. நான் நடிக்கக்கூடாதுன்னு என்னோட மனைவி அமலா, மற்றும் ரெண்டு பசங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
காரணம் இந்தப் படத்துல நான் வீல் சேர்ல உட்கார்ந்தபடி கை காலை கூட அசைக்க முடியாத ஒரு கேரக்டர்ல படம் முழுக்க நடிசு இருக்கேன் .
என் பசங்களாலயும், மனைவியாலயு ம் என்னை அப்படியொரு கேரக்டர்ல ஏத்துக்கவே முடியல.
அதனால ‘தோழா’வைப் பார்க்கும்போது என்ன சொல்ல போறாங்களோன்னு எனக்கு ரொம்ப படபடப்பாக இருக்கு” என்று யதார்த்தமாகப் பேசினர் நாகர்ஜுனா .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462