55 கோடி பட்ஜெட் பலரின் மூன்று வருட உழைப்பு இவற்றில் ‘யான்’ என்ற டப்பா படத்தை எடுத்து ஊத்தி மூடியவர் அவர்.
ஆனாலும் அவர் சொல்கிற ஒரு நியாயமான கருத்தை ஏற்கக் கூடாது என்று கட்டயமா என்ன?
யான் படத்தின் துளசியை பார்த்த போது, “தக்காளி… இந்தப் புள்ளையை எந்த கேமராமேனாவது, எந்த ஒரு ஆங்கிளிலாவது அழகாகக் காட்டி விட்டால், அந்த மாமேதைக்கு ஆஸ்கார் முதல் ஔஸ்கார் வரை அத்தனை விருதுகளையும் அள்ளித்தரலாம் என்று மனசாரத் தோன்றியது மக்காஸ்
அதைத்தான் இப்போது இரவு கே சந்திரனும் சொல்கிறார் .
“படம் ஆரம்பிக்கும்போது இந்த பொண்ணு வேணாம்னு தவிர்க்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனா மணிரத்னமும் ராஜீவ் மேனனும் என்னை வற்புறுத்தி அந்தப் பொண்ணையே கதாநாயகியா போட வச்சுட்டாங்க . இப்ப என்னாலேயே அந்தப் படத்தை பார்க்க முடியல ” என்று புலம்புகிறார் (புரியுதா ? எங்க கஷ்டம் புரியுதா ? )
துளசிக்கு ஏன் இவ்வளவு பெரிய சிபாரிசு ?
நாம அறிமுகப் படுத்தின பொண்ணுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரட்டும் என்று மணிரத்னம் நினைத்திருக்கிறார் .
ராஜீவ் மேனன் ?
துளசியின் அம்மா நடிகை ராதாவும் ராஜீவ் மேனனும் அம்புட்டு குளோஸ் !அதுதான் அந்த ‘இன்பெல்ட்’ சிபாரிசு
இனி…. துளசியை அழகாக்கற வித்தை…. ராதாகிட்டதான் இருக்குங்கோவ் !