‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தேஜ், அடுத்து நடிக்கும் ‘மொழிவது யாதெனில்’ படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. ‘விண்ணைத் தொடு’ என்ற இன்னொரு படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. தவிர காந்தம் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்
இந்தப் படங்களுக்கு அடுத்தபடியாக எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் கிஷோர் குமார் தயாரிக்க, புதுமுக இயக்குனர் வசந்த், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ‘துணிந்தவன்’ என்ற படத்தில் தேஜ் நாயகனாக நடிக்கிறார்.
அண்டர்வேல்ட் தாதாக்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அறிவியல் திரில்லர் மற்றும் காதல் படமாக உருவாக உள்ளதாம் . ‘தம்பிக்கு இந்த ஊரு’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவரும் தெலுங்கில் ஐந்து படங்களிலும், இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்தவருமான மதல்ஷா சர்மா நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக லண்டன் மாடல் அழகி கிமியா நடிக்கிறார்.
விரைவில் வெளிவர இருக்கும் ‘ஆனந்தம் ஆரம்பம்’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருப்பவரும், குங்பூ கலையில் 8 பிளாக் பெல்டுகளை வாங்கியதோடு உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு குங்பூ கற்றுக் கொடுத்து வருபவரும், சைனிஸ் பாக்சிங்கிலும் தேர்ச்சி பெற்றவரான ராஜநாயகம் என்பவர், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்
படத்தில் குங்பூ ராஜநாயகமும், நாயகன் தேஜும் மோதும் சண்டைக்காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட உள்ளது. குங்பூ சண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட இருப்பதோடு, சீன நாட்டு வில்லன் நடிகரான டேனியல் உ என்பவரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாராம் .
துணிஞ்சு அடிங்க !