ஸ்ரீசங்கேஷ்வர் கிரியேஷன்ஸ் மற்றும் நியூ மூன் ஸ்டூடியோஸ் சார்பில் ரோஹித், திலீப் இருவரும் இணைந்து தயாரிக்க, ‘கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ படங்களில் நடித்த தேஜ் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மதால்ஷா சர்மா கதாநாயகியாக நடிக்க. அறிமுக இயக்குனர் அஜீத் இயக்கும் படம் ‘துணிந்தவன்’. ‘காந்தம்’ படத்தின் அசோஸியேட் இயக்குநராக பணியாற்றியவர் இந்த அஜீத்.
வேலை விஷயமாக சீனா செல்லும் நாயகன், அங்கு ஒரு மாஃபியா கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கவனித்து விடுகிறான். அதை அறிந்த அந்த கும்பல் அவரைக் கொலை செய்ய முற்படுகிறது.
சென்னையில் இருந்து சைனா சென்று மாணவர்களுக்கு குங்ஃபூ பயிற்சி அளித்து வரும் ஒரு குங்ஃபூ மாஸ்டர் , கதாநாயகனைக் காப்பாற்றி பத்திரமாக சென்னை அனுப்பி வைக்கிறார்.
பின்தொடர்ந்து சென்னை வரும் அந்த சீன மாஃபியா கும்பல் கதாநாயகியைக் கடத்தி வைத்துக் கொண்டு, பிளாக் மெயில் செய்கிறது. இனி மாபியா கும்பலுடன் கதாநாயகன் தேஜ் மோதுவதுதான் கதை.
குங்ஃபூ மாஸ்டராக நிஜ குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கிறார். குங்ஃபூவில் 8 பிளாக் பெல்ட் வாங்கிய இவர், உலகம் முழுவதும் இதுவரை 10,000 மாணவர்களுக்கு குங்ஃபூ பயிற்சியளித்துள்ளார். இவர்களுடன் சூரி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஹாரீஸ் ஜெயராஜின் உதவியாளர் சபேஷ் சாலமன் இசையமைக்கிறார். மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளிக்க, கூல் ஜெய்ந்த் நடனம் அமைக்கிறார்.
முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சைனாவில் நடைபெற உள்ளது. பாடல் காட்சிகள் வட இந்தியாவின் குளிர் மாநிலங்களில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படியாக ஆக்ஷன், காதல் திரில்லராக உருவாகிறான் ‘துணிந்தவன்’.
துணிஞ்சு அடிங்க .