வெள்ளிவிழா காணும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ! தயாரிப்பாளர் ஆகிறார் ரவீந்திரனின் மகள் சவுந்தர்யா !

டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 25  ஆண்டுகள் ஆகின்றன . அதையொட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார், 
 
 அதன் நிறுவனர் தயாரிப்பாளர் ரவீந்திரன் . கூடவே தன் மகள் சவுந்தர்யாவை தயாரிப்பாளராக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் தகவலையும் சொன்னார் . 
 
நிகழ்ச்சியில் பேசிய ரவீந்திரன் , “ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். 
 
ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு பத்திரிகையாளர்களாகிய நீங்கள்  நல்ல ஆதரவு கொடுத்திங்க.
 
அதன்பின்பு லத்தீப்பும் நானும் இணைந்து பொற்காலம் படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்த பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளேகிடையாது.
 
தமிழ்நாட்டோட பெரிய ஏரியானு சொல்ற NSC-ல படங்களை வெளியிட்டோம்.  அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும்,
நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்கு கொண்டுபோய் சேத்தோம். அந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது நீங்கதான்,
 
நல்ல படம்னு தியேட்டருக்கு போய் பாத்த பிறகுதான் ஆடியன்ஸ்க்கு தெரியும்.ஆனா இது நல்லபடம் நீங்கபோய் பாக்கலாம்னு, 
 
ஆடியன்ஸை தியேட்டருக்கு Pull பண்றது உங்கமாதிரி Media-தான். நாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க நல்ல ஆதரவு கொடுத்திங்க.
 
அஜித்-கூட வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம்-னு நிறைய வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.
 
விஜய்-கூட சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல்னு பிரமிக்கிற வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.
 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, கமல் சாரோட உன்னைபோல் ஒருவன்.. என்று , 
 
இந்த தமிழ் சினிமாவோட அடையாளமா இருக்கிற படங்களைவெளியிட்டதுல எங்களுக்கு பெருமை.
விஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள,  தனுஷின் அது ஒரு கனாகாலம், தேவதையைக் கண்டேன், கொடி, விசாரணை.
 
விக்ரமின் பீமா,  சிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா , சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்,  விஜய்சேதுபதியோட நானும் ரவுடிதான்
 
ஜீவாவின் ராம் , சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன்  சமுத்திரகனியின் அப்பா கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கள்ளழகர்,
 
முரளியின் பூந்தோட்டம் பார்த்திபன் அவர்களின் வெற்றிக் கொடிகட்டு, அழகி
 
இப்படி கிட்டதட்ட மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கோம். இந்த வெற்றி எல்லாத்துக்கும் உங்க ஆதரவும் ஒரு காரணம்.
 
விநியோகத்துல் எங்களுக்கு கிடைச்ச வெற்றிக்கு பிறகு நாங்க தயாரிப்புலஇறங்கினோம்.
 
சசிகுமார் நடிச்ச வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு சிவலிங்கா படத்தை தயாரிச்சோம்.
 
மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்படம் 2, அறம், ராட்சசன்-னு இந்த வருஷமும்,
போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.
 
நாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க கொடுத்த ஆதரவை நாங்க தயாரிக்கிற படங்களுக்கும் கொடுத்திருக்கிங்க.
 
இப்போ மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2, தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படம் இவைகளை  தயாரிச்சுகிட்டு இருக்கோம்.
 
இதுமட்டுமில்லாம இன்னும் சில படங்கள் தயாரிப்புல இருக்கு. அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம்.
 
நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு. 550 படங்களுக்கு மேல வெளியிட்டு இருக்கோம்.
 
இந்த நவீன காலத்துக்கு ஏற்ப Digital-லயும் Trident Arts களம் இறங்கியிருக்கு. Web Series-யும் தயாரிச்சு வெளியிடுகிறோம்.
 
25 வருஷமா.. எங்களோட எல்லா தளங்களிலும் உங்க ஆதரவு தவிர்க்க முடியாம இருந்திருக்கு. அதுக்கெல்லாம் நன்றி சொல்றதுக்காகதான் இந்த சந்திப்பு . 
 
அப்புறம்..என் மகள் சவுந்தர்யாவை டாக்டருக்கு படிக்க வச்சேன் . அவங்களும் படிச்சு டாக்டர் ஆனாங்க. திடீர்னு அவங்க நானும் தயாரிப்பாளரா வர்றேன் னு சொன்னாங்க . 
 
சரி விரும்பியதை செய்யட்டும்னு தயாரிப்பாளரா ஆக்கி இருக்கேன் . எனக்கு அளித்த அதே ஆதரவு என் மகளுக்கும் தரவேண்டும் ” என்றார் . 
“அப்பாவின் அனுபவத்தோடு காலகட்டத்துக்கு ஏற்ற புதுமையான படங்களை கொடுப்போம் , உங்கள் ஆதரவோடு ” என்றார் சவுந்தர்யா ரவீந்திரன் 
 
 பாராட்டுகள் ! சிவப்புக் கம்பள வரவேற்பு ! வாழ்த்துப் பூங்கொத்து சவுந்தர்யா!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *