கெடு கெட்ட – கேவலமான ‘திரிஷா அல்லது நயன்தாரா’

IMG_0545

கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயகுமார் தயாரிக்க  ஜி.வி.  பிரகாஷ் குமார், ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் , வி டி வி  கணேஷ் ஆகியோர் நடிக்க,  ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் ள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா . 

ஒரு கேடு கேட்ட கேவலமான லவ் ஸ்டோரி என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராலேயே குறிப்பிடபடும் இந்தப் படம் நிஜமாகவே ஒரு கேடுகெட்ட கேவலமான … அல்ல அல்ல…. நிஜமாகவே ஒரு காமெடி படம். 

குழந்தைப் பருவம் முதலே ஒன்றாக வளர்ந்து வரும் ஒரு பையன் , ரெண்டு பெண்கள்  நட்பில் ஒரு நிலையில் அந்தப் பையனுக்கு இரண்டு பெண்கள் மீதும் காதல் வர, அவர்கள் இருவருக்கும் இவன் மேல் என்ன வந்தது என்பதே (கடைசியில் வாந்தி வந்தது — கல்யாணத்துக்கு முன்பே — என்று சொல்ல மாட்டீங்களே கண்ணுகளா?) இந்தப் படம்.

BAS_1639_p1

பையனாக ஜி.வி.பிரகாஷ் குமார், பெண்களாக கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் , இந்த குட்டையைக் குழப்பும் கழியாக வி டி வி  கணேஷ் நடிக்கிறாராம் .

ஒரு அப்பாவி இளைஞனின் காதல் கதை , ஒரு கன்னி கழியாத பையனின் சாபம் என்று படத்துக்கு நிறைய ஒன் லைன் விளக்கம் சொல்கிறார்கள் தயாரிப்பாளர் சி.ஜெ. ஜெயக்குமாரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் .

ஆதிக் ரவிச்சந்திரனின் அப்பா ரவி கந்தசாமி ரொம்ப காலம் உதவி இயக்குனராக இருந்தவர் . ஆனால் அவரால் படம் இயக்க முடியவில்லை. இப்போது மகனுக்கு இணை இயக்குனராக  மகிழ்ச்சியாக பணி புரிந்து இருக்கிறார் .

 ஜி வி  பிரகாஷ் குமார் மனிஷா யாதவ் சம்மந்தப்பட்ட ஒரு முத்தக் காட்சியை 36 டேக் எடுத்து டைரக்டர் ஒகே செய்ய ,

36 டேக் முத்தக் காட்சி
36 டேக் முத்தக் காட்சி

பின்னால் ல் இருந்த அவரது அப்பா .. ”இல்ல மகனே…. நாட் ஒகே . ஒன் மோர் போ ” என்றாராம் . யப்பா !!!!!!!

படத்தின் டீசர் வெகுவாக எல்லாரையும் கவர்ந்த நிலையில் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒரு முன்னோட்டத்தையும் மூன்று பாடல்களையும் திரையிட்டார்கள்.

முன்னோட்டம் கலக்கலாக இருந்தது .

BAS_4112பாடல்கள் கலர் ஃபுல்லாக இருந்தன . பிரகாஷ்குமார் நைட்டி எல்லாம் போட்டுக் கொண்டு கும்மாங்குத்து ஆட்டம் ஆடுகிறார் .

இரவு நேர பொருட்காட்சியின் அமைதிப் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்த பாடல் நல்ல ரசனை .

BAS_1489_p1

சிம்ரன் ஒரு காட்சியில் ” காதல் என்பது தலையில வந்த பொடுகு மாதிரி . போயிட்ட மாதிரி தெரியும். ஆனா முழுசா போகாது . ஒரு பக்கம் அதுவும் இருந்துகிட்டுதான் இருக்கும்”

பர்தாவுக்குள் சிம்ரன்
பர்தாவுக்குள் சிம்ரன்

என்று பஞ்ச் டயலாக் .. இல்லை இல்லை ….. ‘பொடுகு டயலாக்’ பேசுகிறார் .

படத்தின் முன்னோட்டத்தை  இயக்குனர் முருகதாஸ் வெளியிட இயக்குனர் ஆதிக்கின் அப்பா ரவி கந்தசாமி பெற்றுக் கொண்டார். பல வருடங்கள் உதவி இயக்குனராய் பணிபுரிந்து இப்படத்தில் இணை இயக்குனராய் பணி புரிந்திருக்கும் ரவி கந்தசாமியை கௌரவப் படுத்தும் வகையில் நடந்த இந் நிகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ செய்தது.

IMG_0552

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்  தலைவர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர்கள் முருகதாஸ், பார்த்திபன், விஜய், கொம்பன் இயக்குனர் முத்தையா , பாடலாசிரியர் நா.முத்துக்குமார். , திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் சி வி  குமார், 2D எண்டர்டெய்ன்மென்ட் ராஜசேகர் இவர்களுடன் இந்தப் படத்தை வங்கி வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாணு பேசும்போது “ இயக்குனர் ஆதிக் மிகவும் திறமைசாலி, த்ரிஷா இல்லனா நயன்தாரா கதையை சில வருடங்களுக்கு முன் என்னிடம் கூறினார். அப்பொழுது என் நிறுவனத்தின் கீழ் வேறு சில படங்கள் தயாரித்து வந்ததால் என்னால் தயாரிக்க  இயலவில்லை. ஜெயகுமார் தயாரிக்க முடிவு செய்தது மிக நேர்த்தியான முடிவு” என்றார்.

IMG_0541

இயக்குனர் பார்த்திபன்  “ பிரகாஷை இப்படி பார்க்க மிக ஆச்சர்யமாய் உள்ளது. பல ஐட்டங்களை உள்ளடக்கியிருக்கும் பிரகாஷ் ஒரு ஐட்டம்தான்”  என்று கிண்டல் செய்தார்.

“நடிப்பு, இசை என பிரகாஷ் மிகவும் பக்குவம் பெற்றுவிட்டார். இரண்டிற்கும் நேரத்தை சரியாக கடைப்பிடிக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார் இயக்குனர் விஜய்.

இயக்குனர் முருகதாஸ் பேசுகையில் “வெவ்வேறு துறைகளை கடந்து செல்லும் ஜி வி  பிரகாஷுக்கு எனது வாழ்த்துக்கள். முதலில் என்னுடைய தயாரிப்பில்தான் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த எண்ணினேன். அது அமையவில்லை. எனினும் என் தயாரிப்பில் பிரகாஷ் கண்டிப்பாக நடிப்பார்”என்றார்

IMG_0549

ஞானவேல் ராஜா பேசும்போது ” டார்லிங் படத்தின் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லியும் யாரும் ஒத்துக்கல . காரணம் கதாநாயகி அடி வாங்குவது போல படத்தில் பல காட்சிகள் இருந்ததால் யாரும் நடிக்க ஒத்துக்கல. அப்போதான் ஒரு  ஜிம்முல உடற்பயிற்சி பண்ணிட்டு வந்துட்டு இருந்த ஜி வி பிரகாஷ் குமாரை பார்த்தேன் . நடிக்கக் கேட்டேன் . அப்படிதான் அவர் டார்லிங் படத்துல நடிகனா அறிமுகம் ஆனார். 

படம் நன்றாக போனதில்  எல்லோருக்கும்ம் மகிழ்ச்சி. இப்பொழுது அவர் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுவதிலும் எனக்கு  பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் . 

IMG_0546

”எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார் ஜி வி பிரகாஷ் குமார் .

அனைவரும்னா……? ரெண்டு பேரா பிரகாஷ் குமார் ?

 

 

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →