வில்லத்தனமான கேரக்டர்கள் இல்லாமல் , மாமியார் மருமகள் சண்டை இல்லாமல், அழுது வடியும் கதாபாத்திரங்கள் இல்லாமல் .. இப்படி வழக்கமான தொலைக்காட்சி கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுக்க முடியுமா?
முடியும் என்று களம் இறங்கி இருக்கிறது ஏ வி எம் நிறுவனம் !
ஏ வி எம் தயாரிப்பில் விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஏழரை மணி முதல் எட்டு மணி வரை ஒளிபரப்பாக இருக்கும் மோகினி என்ற தொடர் முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சஸ்பென்ஸ், திரில் , திகைப்பு , வியப்பு ஆகியவற்றுடன் எடுக்கப்படுகிறதாம்.
இப்படி ஒரு தைரியமான பெண்ணை பார்க்க முடிகிறதா என்று வியக்கும் அளவுக்கு வருகிறதாம் மோகினி என்ற கதாபாத்திரம் . அப்படி என்னங்க கதை என்றால்….
அம்மா அப்பாவின் அன்பு வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு காதலித்தவனை விட்டு விட்டு அவனது நண்பனை மணக்கிறாள் மோகினி. முதலிரவில் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது .(ஐயோ பயந்து வருதே !ஐயா பெரியவகளே… கலாச்சாரப் புரட்சி எதுவும் பண்ணிடலையே ?)
எனவே வில்லத்தனமான கேரக்டர்கள் இல்லாமல் , மாமியார் மருமகள் சண்டை இல்லாமல், அழுது வடியும் கதாபாத்திரங்கள் இல்லாமல் .. இப்படி வழக்கமான தொலைக்காட்சி கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாமல் இந்தத் தொடர் வரும் என்கிறது ஏ வி எம் நிறுவனம்.
சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும் மொதலாளி !