கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் அட்லஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்
ரூபன் ஃபிளஸ்ச்சர் இயக்கத்தில்
டாம் ஹாலண்ட், மார்க் வால்பர்க், சோபியா டய்லர், டடி கேப்ரியல் நடிப்பில்
ராமின் ட்ஜவடி இசை சங் ஹூன் சங் ஒளிப்பதிவில் கிரிஸ் லேபேன்ஜென் , ரிச்சர்டு பியர்சன் படத் தொகுப்பில்
வெளியாகி இருக்கும் அட்டகாசமான அதிரடி ஆக்ஷன் படம் uncharted
ஹாலிவுட் சினிமா கொன்று மென்று தின்று சப்பி துப்பிய தங்க வேட்டை கதைதான் . அதுவும் ஆயிரத்து ஐநூத்து அம்பத்து மூனாவது தடவையாக அதே மாடல் கிளைமாக்ஸ்
ஆனாலும் பல விசயங்களில் அசத்தி இருக்கிறார்கள்
பலரும் கூடும் இடங்களில் இருக்கிற ரகசிய அறைகள் , அதைத் திறக்கும் சாவிகள், அதை திறப்பதில் உள்ள சுவாரஸ்யமான தடைகள்….
வாய் பிளக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் ,
சிறப்பாக கிராபிக்ஸ் காட்சிகள்
மனம் மயக்கும் கலைப் பொருட்கள்
அட்டகாசமான விஷுவல் அனுபவம் இந்தப் படம்