A/C யில் கொளுத்திய தாணு : ‘உன்னோடு கா’ விட்ட பன்னீர் செல்வம்

ka 3

அபிராமி  ராமநாதன் நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில் ஆரி, மாயா, பிரபு , ஊர்வசி , பால சரவணன் , மிஷா கோஷல் நடிப்பில் ஆர் கே என்பவர் இயக்கி இருக்கும் படம் உன்னோடு கா .

படத்துக்கு இசை சத்யா , ஒளிப்பதிவு சக்தி சரவணன் .  

படத்தின் பாடல் வெளியீட்டு விழா  தயாரிப்பாளருக்குச் சொந்தமான அபிராமி மெகா மாலில் நடந்தது .  படத்தின் முன்னோட்டமும் மூன்று பாடல்களும் திரையிடப்பட்டன. 
கிராமத்தில் கோழி பிடிக்கும் கூட்டத்தில் இருந்து சிறுவர் சிறுமிகள் கோழியைக் காப்பாற்றும் பாடல் இசை , வரிகள், குரல்கள், படம் எடுக்கப்பட்ட விதம் எல்லாவகையிலும்  சிறப்பாக இருந்தது . 
ka 6666
கும்பலாக ஒன்று கூடி படாடோபமாக ஆடிப்பாடும் பாடல் ஒன்று ( பிரபுவை அப்படியே  சேர்த்துப் பிடித்து சில சென்டிமீட்டர்கள் தூக்குகிறார் ஊர்வசி . அம்மாடியோவ் , கப்பா அரிசி பவர் !)
ஆரி , மாயா நடித்த காதல் பாடல் ஒன்று ஸ்லோ மோஷனில் ஆற அமர எடுக்கப்பட்டு இருந்தது . 
ஒரு ஜோடி ஓடிப் போக , அதைக் கேள்விப்பட்டு பெண்ணின் பெற்றோரும் பையனின் பெற்றோரும் சந்தோஷப் படுவதைக் காட்டியது முன்னோட்டம் .
கோழி பிடிக்கும் பாடலை மேடையிலும் பாடிக் காட்டினார்கள் . அருமை 
ka 666
“ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு தற்போது ‘உன்னோடு கா’ திரைப்படத்தின் மூலமாக நிஜமாகி உள்ளது.
பொதுவாக காதலை எதிர்க்கும் பெற்றோர்களை தான் நாம் இதுவரை திரையில் கண்டுள்ளோம். ஆனால் இந்த படத்தில், மகனின் காதலை சேர்த்து வைக்க போராடும் பெற்றோர்களை ரசிகர்கள் காண்பார்கள்.
இது தான் இந்த ‘உன்னோடு கா’ திரைப்படத்தின் கதை கரு. ஆனால் இந்த கதை என்னும் சிற்பத்தை அழகிய வடிவில் செதுக்கியது இயக்குனர்  ஆர் கே தான். 
எங்களுடைய முதல் சந்திப்பிலேயே நான்  ஆர் கே வின் திறமையை பற்றி அறிந்து கொண்டேன். நான் அவர் மீது வைத்த நம்பிக்கை சற்றும் வீண் போகவில்லை
ka 7
இந்தப் படத்துக்காக பிரபு சார்  எனது சொந்த ஊரான பூலாங்குறிச்சிக்கு வந்து பதினைந்து நாள் தங்கி நடித்துக் கொடுத்தார் .
ஒரு நாள் கன்னியாகுமரியில் இருந்து இறால் மீன்களை தன் செலவில் வரவழைத்து சமைத்து எல்லோரையும் சாப்பிட வைத்தார் . அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை” என்றார் படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்.
பதிலுக்கு பிரபு பேசும்போது ” பூலாங்குறிச்சியில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தைக் கட்டி எல்லோரும் இலவசமாக அதைப் பயன்படுத்திக் கொள்ள வைத்து இருக்கிறார் அபிராமி ராமநாதன்.
அப்படி ஒரு கொடை வள்ளல்  அவர் . (குடை அல்ல பிரபு  சார் )
ka 8
நான் பல படங்களில் அப்பா வேடத்தில்  நடித்திருந்தாலும், உன்னோடு கா திரைப்படத்தில் நடித்த அனுபவம் உண்மையாகவே மறக்க முடியாதது.
படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை நடந்த ஒவ்வொரு காட்சியும் நான் ரசித்து, அனுபவித்து நடித்தேன் .அந்த அளவிற்கு இந்த திரைப்படம் என்னை கவர்ந்தது
இந்தப் படத்தில் ஊர்வசியோடு நடித்தது ரொம்ப சந்தோசம் . ஊர்வசி மிகச் சிறந்த நடிகை என்று அண்ணன் கமல்ஹாசனே என்னிடம் பல முறை வியந்து கூறி இருக்கிறார் .
ka7777அவர் மட்டுமல்ல.. ஆரி, மாயா, பால சரவணன்,மிஷா கோஷல், கை தென்னவன் உட்பட எல்லோருமே மிக சிறப்பாக நடித்து உள்ளனர் ” என்றார் ” என்றார் . 
“என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு சந்தோஷங்களை இந்த திரைப்படம் எனக்கு கொடுத்துள்ளது.
ka 888
ஒன்று அபிராமி ராமநாதன் சார் அவர்களின் திரைப்படத்தில் நடித்தது; 
மற்றொன்று வெகு நாட்களுக்கு பிறகு பிரபுவுடன் ஜோடி சேர்ந்து  நடித்தது” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறினார் நடிகை ஊர்வசி.
இயக்குனர் RK கூறுகையில், ” நான் ஒரு அறிமுக இயக்குனர் என்றாலும் எனக்கான முழு சுதந்திரத்தையும் கொடுத்தவர் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் தான்.
அந்த ஒரு காரணம்தான் என்னை இந்த படத்தில் முழு ஈடுபாடுடன் இயங்கச் செய்தது. 
நான் மட்டும் இல்லாமல் எங்களின்  ஒட்டு மொத்த குழுவும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டதால் தான் ‘உன்னோடு கா’ திரைப்படத்தை அழகாக உருவாக்க முடிந்தது.” என்றார்
 ka 5
சென்னை 28, சரோஜா, சிவா மனசுல சக்தி, மங்காத்தா போன்ற திரைப்படங்களை அடுத்து இந்தப் படத்துக்கு  ஒளிப்பதிவு செய்து இருக்கும்  சக்தி சரவணன் பேசும்போது ,
“அனைத்து தரப்பு மக்களும் சமம் என்ற எண்ணம் கொண்டவர் அபிராமி ராமநாதன் அவர்கள். 
பத்து ரூபாய் டிக்கெட்டுக்குரிய இருக்கையும், 120 ரூபாய் டிக்கெட்டுக்குரிய இருக்கையும் சமமாக இருப்பதை  ஐயா ராமநாதன் அவர்களின் அபிராமி திரையரங்கில் மட்டும் தான் காண முடியும்.
 ka 88
மேலும், படத்தின் இசைக்கு ஏற்றவாறு நான் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்குவேன் என்று இசை அமைப்பாளர் சத்யாவிற்கு நான் கொடுத்த வாக்கு,
 இப்போது நிறைவேறி உள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்றார். 
நெடுஞ்சாலை திரைப்படத்தில் இருந்து முற்றிலும்  மாறான கதாபாத்திரத்தில் ஆரி இந்த படத்தில் நடித்துள்ளார். “ராமநாதன் சார் படத்தில் நான் நடித்தது, எனக்கு கிடைத்த வரமாக தான் கருதுகிறேன். 
கண்டிப்பாக எங்கள் குழுவினர் அனைவரும் தங்களின் முழு உழைப்பை இந்த படத்திற்காக அளித்துள்ளனர்.
ka 8888
‘உன்னோடு கா’ நிச்சயம் கோடைக்கால விடுமுறைக்கு ஏற்ற விருந்தாக அமையும் என நம்புகிறேன்!” என்றார் நடிகர் ஆரி.
பாடலாசிரியர்  மதன் கார்க்கி .” இந்த படத்தில் வரும் ‘ஊதே ஊதே’  என்னும் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
ka 77777‘ரா’ என்னும் தமிழ் வார்த்தை ‘தா’ வாக இந்த பாடலில் உச்சரிக்கப்படுவது இந்த பாடலின் தனித்துவமான சிறப்பு.
இந்த படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் சினிமா தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்;
திரையரங்குகளில் முதன் முதலாக DTS டெக்னாலஜியை கொண்டு வந்த பெருமை ராமநாதன் அவர்களையே சேரும்” என்றவர், 
தொடர்ந்து தான்  துவங்கி இருக்கும் www.doopadoo.com பற்றி கூறும்போது
ka 4 
“ஒரு காலத்தில் ஆடியோ என்பது பெரிய மார்க்கெட். இப்போது  அது இல்லை .
மிகப் பெரிய ஹிட் பாடலின் மூலம் கூட, தயாரிப்பாளருக்கு சில ஆயிரங்கள் வருவதே பெரிய விசயமாக இருக்கிறது. 
இதை மாற்றி தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர்  பாடகர்கள் அனைவருக்கும் வருமானம் வரச் செய்யும் திட்டம்தான் இது 
ka 66
இந்த இணைய தளத்துக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் பாடல்களை தரலாம் . பாடல்களைக் கேட்க விரும்பும் ரசிகர்கள் இந்த இணையதளத்தில் போய் பதிவு செய்து கொள்ளலாம் .
பாடல்களைக் கேட்கும் ரசிகர்களுக்கும் இதில் வருமானம் உண்டு ” என்றார் .
ka 1
அது எப்படி என்பதை விளக்கி அபிராமி  ராமநாதன்
” இதில் பாடலைக் கேட்கும் ரசிகர்களுக்கு ஒவ்வொருமுறை கேட்கும்போதும்  பண மதிப்பு அவர்கள் கணக்கில் உருவாகும் . 
ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அந்த பண மதிப்பின் அடிப்படையில் ரசிகர்கள் ஆன் லைனில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் . செல்போன் ரீசார்ஜ் செய்யலாம் . 
இது எப்படி சாத்தியம் என்று கேட்பீர்கள் . இந்தப் பாடல்களுக்கு இடையே விளம்பரங்கள் வரும் . அந்த விளம்பர நிறுவனங்கள்தான் பணம் தருகின்றன.
ka 2
அந்த தொகையில் இருந்துதான் தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர்கள் , பாடகர்கள் அனைவருக்கும் வருமானம் வரும் .
டூபாடூவில்  இணையும் படங்களின் பாடல்களை நீங்கள் யூ டியூப் உள்ளிட்ட வேறு எங்கும் பார்க்க முடியாது ” என்றார் 
தெறி படப் பிரச்னையில் கலைப்புலி எஸ் தாணுவுக்கும் செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வத்துக்கும் உள்ள பிரச்னை பலருக்கும் தெரியும் .
அண்மையில் அது குறித்த ஒரு பிரஸ்மீட்டில் தாணு ” டி.ராமனுஜம் போன்ற மிகச் சிறந்த மனிதர்கள் இருந்த பதவி, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவி .
ka 6
அபிராமி ராமநாதன் போன்றோர் அதை மிகச் சிறப்பாக செய்பவர்கள் .  ஆனால் அந்தப் பதவியில் உட்கார்ந்து கொண்டு நீ சினிமாவையே அழிக்கிறாய் ” என்று பன்னீர் செல்வத்தைக்  குற்றம் சாட்டி இருந்தார் .
பன்னீர் செல்வமும் ஒரு பேட்டியில் “இது பற்றி என்னோடு நேரில் விவாதிக்க தாணு தயாரா ? என்று கேட்டு இருந்தார் .
இந்த நிலையில் இந்த உன்னோடு கா  பாடல் வெளியீட்டு விழாவுக்கு பன்னீர் செல்வம் முதலில் வந்து அமர்ந்திருக்க , பின்னர் வந்தார் தாணு .
படக் குழுவினரை வாழ்த்திப் பேசிய தாணு அதன் தொடர்சியாக நைசாக ” டி. ராமனுஜம் என்ற மாமனிதர் என் மீது எப்போதும் அன்பாக இருப்பார் . நானும் அதே அன்போடும் மரியாதையோடும் இருந்தேன்.
ka 777
அபிராமி ராமநாதனும் அப்படியே .  இவர்கள் எல்லாம் சினிமாவை வாழ வைக்க நினைப்பவர்கள் ” என்று  லைட்டாக, பன்னீர் செல்வத்துக்கு எதிராக கொளுத்திப் போட்டார் .
அடுத்த சில நிமிடங்களில் பன்னீர் செல்வம்  இருக்கையில் இருந்து எழுந்து வெளியே போனார் . அபிராமி ராமநாதன் தனது அலுவலர் ஒருவரிடம் சைகை காட்ட , அவர் பன்னீர் செல்வத்தை அணுகினார். 
“பாத்ரூம் போயிட்டு வரேன் என்ற ரீதியில் ஏதோ சொல்லி விட்டு வெளியே போனார் பன்னீர் செல்வம் . 
பன்னீர்  செல்வம்
பன்னீர் செல்வம்

பின்னர் பேச அழைக்கப்பட்டபோது  அவர் அரங்கிலேயே இல்லை . சின்ன ஆயாசத்தோடு அபிராமி ராமநாதன் தனது மனைவி நல்லம்மையிடம் ‘ அடுத்த பேரை  பேசக் கூப்பிடு”  என்றார் .

அனேகமாக அந்த நேரம் பன்னீர் செல்வம் பாத் ரூமில் இருந்திருக்க வேண்டும் , அதாவது அவரது வீட்டு  பாத்ரூமில் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →