ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில்,
ஜி வி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆசிப் குரைஷி முதன் முதலாக எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா . படத்தின் முன்னோட்டத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பும் இசை வெளியீட்டு விழாவின் மூலம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் ,
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள் . பேசிய எல்லோரும் தவறாமல் , உதயாவின் இனிய குணம் , நட்பான சுபாவம், , எளிமை , பிறருக்கு உதவும் பண்பு, உழைப்பு ஆகியவற்றோடு,
தயாரிப்பாளர் தனஞ்செயன் தன் பேச்சில் , “இந்த மேடைக்கு நான் தயாரிப்பாளராக வரவில்லை . நடிகனாக வந்துள்ளேன்.
ஒரு நாள் உதயா எனக்கு போன் செய்து, ‘ சார் .. ஒரு முக்கிய கேரக்டர் . நடிக்க வரவேண்டியவர் வர முடியவில்லை . நீங்கள் நடித்துத் தர முடியுமா ?” என்று கேட்டார் .
போனேன் நடித்துக் கொடுத்தேன் . நிறைய வசனம் இருந்தது .
படத்தில் என்னுடன் பத்திரிகையாளர் செந்தில் குமரனும் நடித்துள்ளார் . பல படங்களின் மூலம் நல்ல குணச்சித்திர நடிகராக அவர் வளர்ந்து வருகிறார் .
அவருக்கு என் வாழ்த்துகள்
மிக முக்கியமாக உதயாவின் உழைப்பு அபாரமானது . அவர் எல்லாரையும் மதித்த விதமும் சிறப்பானது . படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார்
கதாநாயகி பிரியங்கா, “பிரபு சார் , உதயா சார் இப்படி பெரிய நடிகர்கள் நடிகர்கள் நடித்த — நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நானும் இருப்பது சந்தோசம் ” என்றார் .
ஸ்ரீமன் தனது பேச்சில் , ” நிறைய நடிகர்களை வைத்து மிக நல்ல கதையோடு இந்தப் படத்தை எடுத்து உள்ளார் உதயா .இது இரண்டு கரண்டி மாவை வைத்து வி ஜி பி தோசை சுட்டதற்கு சமம். மிகவும் போராடி உள்ளார் . அவர் ஜெயிக்க வேண்டும்” என்றார்
நாயகனும் தயாரிப்பாளருமான உதயா தனது பேச்சில், “இந்தப் படத்தின் ஹீரோ என்றால் பிரபு சார்தான் என்று சொல்லக் கூடிய அளவுக்கு தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார் .
அவர் நடித்த திருநெல்வேலி படத்தில்தான் நான் நடிகனாக அறிமுகம் ஆனேன். அவரிடம் இருந்துதான் நேரம் தவறாமையை கற்றுக் கொண்டேன்.
இது சவுண்டுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம்
மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்தப் படத்தை எடுத்துள்ளேன் . நவம்பர் 16 ஆம் தேதி வெளியீடு என்று,
எப்போதோ முடிவு செய்து, தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதியும் வாங்கி , விளம்பரம் செய்து வருகிறேன் .
ஆனால் இப்போது சொல்கிறார்கள்…விஜய் சேதுபதியின் சீதக்காதி படமும் , ஜெயம் ரவியின் அடங்க மறு படமும் அதே தேதியில் வெளிவர திட்டமிடுகின்றனர் என்று .
அவை வந்தால் என் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது . நான் வெகு நாட்களாக ‘ நவம்பர் 16 ஆம் தேதி வெளியீடு’ என்று, செலவு செய்து விளம்பரமும் செய்து விட்டேன் .
எனவே அவர்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப் போட்டு எனக்கு உதவ வேண்டும் ” என்றார்
பிரபு பேசும்போது, ” இந்தப் படத்தில் மிக நல்ல கதை திரைக்கதையில் ஆசிப் குரைஷி சிறப்பான இயக்கத்தில் மிக அட்டகாசமாக நடித்துள்ளார் உதயா .
உயிரைக் கொடுத்து டப்பிங் பேசி உள்ளார் . படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அவர் பெரிய ஹீரோவாக உயர்வார் ” என்றார்
படம் பற்றி இயக்குனர் என்ன சொல்கிறார் ?”ஒரு காலத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன . எது நல்லது எதுகேட்டது என்று சொல்லித் தரும் வழக்கம் இருந்தது .
இன்று அவை இல்லாமல் போனதால் , சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது . அது தப்பு.
மனம் நல்லதை சொல்லும்போது பணிந்து கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும் ” என்கிறார்
அருமை !