பாராடிக்ம் பிக்சர்ஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மென்ட் சார்பில் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு ப்ரியா பிள்ளை, காயத்ரி , லிஜீஷ் நடிப்பில் பாவல் நவ கீதன் இயக்கி இருக்கும் படம் .
எதிர்பாராத விதமாக மனைவியை இழந்த தடய அறிவியல் நிபுணன் ஒருவன் ( ராம் அருண் காஸ்ட்ரோ) அதன் பிறகு இருட்டைக் கண்டு பயப்படும் மன நிலைக்கு ஆளாகிறான் .
சக போலீஸ் அதிகாரியான தோழி லூனா ( விஷ்ணு ப்ரியா பிள்ளை) அவனுக்கு உதவியாக இருக்கிறாள் .
வி 1 என்ற எண் கொண்ட வீட்டில் நடக்கும் கொலை விசாரணையில் அவனை வற்புறுத்தி இறங்க வைக்கிறாள் தோழி. ஒரு நிலையில் அவன் உயிருக்கே ஆபத்தாகி விடுமோ என்று பயப்படுகிறாள்.
இன்னொரு பக்கம் பலரிடமும் தீவிர விசாரணை செய்கிறார்கள் . முடிவு என்ன என்பதே இந்தப் படம் .
வித்தியாசமான களத்தில் நிகழும் கதை . பாராட்டுக்கள் .
இது போன்ற ஒரு கதைப் படத்திலும் சமூக அக்கறை பேச முடியும் என்ற பார்வைக்கு வாழ்த்துகள் .
கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு ஒகே ரகம்.
பிரேம் குமாரின் படத் தொகுப்பு கிடைத்த விசயங்களை கச்சிதமாக பயன்படுத்தி படத் தொகுப்பு செய்திருக்கிறது
மிகை நடிப்பு , நாடகத்தனமான காட்சிகள் , குழந்தைத்தனமான வசனங்கள், படத்தின் குறை .
கிளைமாக்சில் சொல்லும் விசயத்துக்காக பாராட்டு