அஜித்தால் தள்ளிப் போன அருண் விஜய் படம் !

IMG_0067

தடையறத் தாக்க படத்தின் நாயகனாக தட தட வெற்றி , என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் எதிர் நாயகனாக இனிப்பான வெற்றி .. இந்த வெற்றிகளுக்குப் பிறகு …..

ஃபெதர் டச் எண்டர்டெயின்மென்ட் சார்பில் அருண் குமாரின் மனைவி ஆர்த்தி அருண், ஆர்த்தியின் சகோதரர் ஹேமந்த் மோகன் இருவரும் தயாரிக்க , அருண் விஜய் நாயகனாகவும் கார்த்திகா நாயகியாகவும் நடிக்க, இரத்தின சிவா இயக்கி இருக்கும் படம் “வா” (வா டீல் என்ற பெயர்,  இப்போது வா என ஆகி இருக்கிறது . தமிழ் வாழ்க !)

“யாரைப் பார்த்தாலும் ஏதாவது டீல் போட அழைப்பது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் வழக்கம் ” என்று ஆரம்பிக்கும் அருண் விஜய் ” ஒரு நிலையில் எல்லா கதாபாத்திரங்களும் எல்லோரையும் வா என்று அழைத்து கொண்டே இருக்கும் . வில்லன் என்னை அழைப்பான். நான் வில்லனை அழைப்பேன் . நாயகி என்னை அழைப்பார். அப்படி ஒரு சுவாரசியம் !

இரத்தின சிவா அட்டகாசமான திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கியுள்ளார். எதிர் நீச்சல் சதீஷ் என் நண்பனாக நடித்துள்ளார். டான்ஸ் மாஸ்டர் கல்யாண் , வம்சி கிருஷ்ணா இருவரும் வில்லனாக நடித்துள்ளனர் . எஸ் எஸ் தமன் இசை அமைத்துள்ளார் . இது முழுக்க முழுக்க பொறி பறக்கும் ஆக்ஷன் படம்.

உண்மையில் இந்தப் படம் என்னை அறிந்தால் படத்துக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது . ஆனால் படத்தின் சில காட்சிகளைப் பார்த்த அஜித் சார், நம்ம படத்துக்கு அப்புறம் ரிலீஸ் பண்ணுங்க . உங்களுக்கு பிளஸ்சா இருக்கும்னு சொன்னார் .அதுக்கு ஏத்த மாதிரி இப்ப ரிலீஸ் பண்ணப் போறோம் . அவர் சொன்னது எவ்ளோ நல்ல அட்வைஸ்னு இப்ப புரியுது. அவரோட ரசிகர்கள் ஆதரவும் இப்ப கிடைச்சிருக்கு ” என்கிறார் .

IMG_0161

படத்தின் கதாநாயகி கார்த்திகா என்ன சொல்கிறார்?.  “நான் அறிமுகமான கோ படம் எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது . அதுக்கு பிறகு நான் நடிச்ச பல படங்கள்ல ரொம்ப டாமினேட்டிங் ஆன  கேரக்டர்லதான் நடிச்சேன் . ஆனா இந்தப் படத்துலதான் முழுமையான பொண்ணா நடிச்சு இருக்கேன். எனக்கு நிறைய சீன்ஸ் இருக்கற படம் இது .

பொதுவா ஒரு நல்ல படத்துல நடிக்கும்போது ஒரு குடும்பமா பழகினோம்னு சொல்வாங்க . இந்தப் படத்தில் நான் அதை உணர்ந்தேன் . டைரக்டர் சிவா சார் சீன் சொல்லி விளக்குற விதம் பிரம்மாதமா இருக்கும் ” என்றார் .

“படத்தின் கதை பற்றி ஒரு வரியாவது சொல்லுங்க ” என்றால்,  “சரி ஒரு வரியிலேயே சொல்றேன் ” என்று ஆரம்பித்த இயக்குனர் இரத்தின சிவா (குசும்பு .. லொள்ளு !)

 IMG_0053

” ஒரு விஷயம் வேணாம்னு சொல்லி எப்போ நீங்க தள்ளி வைக்கிறீங்களோ.. அப்போதான் நீங்க அதை செய்யப் போறதுக்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகுது . அதை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகுது . எல்லாம் விதி . இதுதான் கதை ” என்றார்.

இந்த வார்த்தையை அநேகமாக அண்ணன் ரத்தின சிவா கார்த்திகாவிடமும் சொல்லி இருக்கணும் . அதனாலதான் “உங்கள் முதல் படமான கோ படம் ஓஹோ என்று ஓடியும் நீங்க பெரிய கதாநாயகியா வரலியே?’ என்ற கேள்விக்கு “எல்ல்லலல்லாம் விdhdhdhdhdhதி ” என்ற பதிலை அவர் சொன்னார் )

சரி டிரைலரும் பாடல்களும் எப்படி இருக்கு ?

நடனம் , சண்டைக் காட்சிகள் இரண்டிலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள் அருண் விஜய்யும் தொழில் நுட்பக் கலைஞர்களும் !

பாடல்களில் ஒளிப்பதிவாளர் கண்ணுக்குள் இளநீர் ஊற்ற , லொக்கேஷன்கள் சிறப்பாக இருக்க , நடனமும் நன்றாக இருக்கிறது . நிஜமாகவே கார்த்திகா வெட்கப்பட்டு எல்லாம் நடித்திருக்கிறார் .

தனது கேரக்டர் பற்றி அருண் விஜய் சொன்ன டீல் விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு டிரைலரை பார்க்கையில் , ஒரு இடத்தில் பரபரப்பான ஆபத்தான சூழ் நிலையிலும் “சரி இப்ப நமக்குள்ள ஒரு டீல்…” என்று கார்த்திக்கா வலியோடு சொல்வதைப் பார்த்தால்…… அருண் விஜய் சொன்னதுபோல திரைக்கதையிலும் நிறைய சுவாரஸ்யமான விசயங்களை இயக்குனர் ரத்ன சிவா வைத்திருக்கிறார் என்பது புரிகிறது .

IMG_0210

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜன நாதன் , லிங்கு சாமி , கவுதம் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் . ரசிகர்களும் வாழ்த்துவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன .

வாழ்த்துகள் வா டீம்(ல்) !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →