வடக்குப்பட்டி ராமசாமி @ விமர்சனம்

பீப்புள் மீடியா ஃபேக்டரி  சார்பில் டி ஜி விஷ்வ பிரசாத் தயாரிக்க, சந்தானம் , மேகா ஆகாஷ் , மாறன், சேஷு , தமிழ் , ஜான் விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும்   படம். 

1970 களின் காலம் 

சிறு வயதில் வறுமையில் உழன்று , பக்தி என்ற பெயரில் மக்களிடம் இருக்கும் அறியாமையால் ஒரு கோவிலைக் கட்டும் அளவுக்கு உயர்கிறான் ராமசாமி ( சந்தானம்) 

அவன் நிலத்தில் இருக்கும் கோவில் என்றாலும் அதில் மக்களின் வசதிக்காக சில வசதிகளை ஏற்படுத்த தனக்கு வசதியான காண்ட்ராக்டரை அனுப்புவதோடு , கோவிலின் மூலம் வரப்போகும்  வருமானத்தில் மாதாமாதம் ‘நான்கு பங்கு எனக்கு ஒரு பங்கு உனக்கு ‘என்கிறார் தாசில்தார்  ( தமிழ்)

அப்படியே தலை கீழாக சொல்கிறான் ராமசாமி . 

இந்த இரண்டு பொறம்போக்குகளில் எந்தப் பொறம்போக்கு வெல்வது என்பதற்கான போட்டி துவங்குகிறது . 

ஊருக்குள் இரண்டு பெரிய குடும்பத்துமுட்டாள்  நபர்கள் (ரவி மரியா, ஜான் விஜய்)  எப்போதும் அவர்களுக்குள் போட்டி . இருவரையும்  யார் பயன்படுத்திக் கொள்வது என்பதில் ராமசாமிக்கும் தாசிலதாருக்கும் பலப்பரீட்சை 

அப்போது முதல் முதலில் சென்னையில் பரவத் துவங்கி மெட்ராஸ் ஐ என்ற பெயர் பெற்ற கண் நோயை ஊருக்குள் பரப்பி தன் தரப்பை வலுப்படுத்த ராமசாமி நினைக்க, அதை உடைக்க தாசில்தார் முயல நடந்தது என்ன என்பதே படம். 

அட்டகாசமான தயாரிப்பாளர். பிரம்மாதமான தயாரிப்புத் தரம். இப்படி இரு தயாரிப்பாளர் கிடைப்பது வரம்  .  

அருமையான லொக்கேஷன் . சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் தரம். ,குஸ்காவை பிரியாணியாக்க ஒளிப்பதிவாளர் தீபக்கும், படத் தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரனும் போராடி இருக்கிறார்கள் . 

கிராமியக் கதை என்ற பெயரில் ஒரு கதை . காமெடி போல சில முயற்சிகள். இன்னும் கக்கா போவதைப் பற்றி வசனம் வைப்பதையும் கெட்டவார்த்தையை பாதியில் நிறுத்திப் புரிய வைப்பதையும்  காமடி என்று நம்பும் அருவருப்பு அறிவு  என்று … எல்லா அனர்த்தங்களும் கொண்ட படம் . 

தமிழ் சினிமாவில் இப்போது நடிக்கும்  ஒரு சில நிஜ அழகிகளில் ஒருவர் மேகா ஆகாஷ். அவரையே பேக்கு மாதிரி காட்டிய பேக்குத்தனம் படத்தின் பெரிய காமெடி . 

மாறன் கூட ஏமாற்றி விட்டார் . சேஷு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் . 

என்றாலும் படத்தை தனித்துத் தாங்கி தூக்கி நிறுத்துகிறார் சந்தானம் . அவர்  இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை . 

சந்தானத்துக்கு ஒரு வார்த்தை … உங்களை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றிக் கொண்டு போகும் படைப்பாளிகளுடன் சேரவேண்டும்.  உங்கள் இமேஜை பயன்படுத்தி மஞ்சள் குளிக்கும் ஆட்களோடு அல்ல 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *