நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), பப்ளிசிட்டி டிசைன்ஸ் – ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர்.
அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி pesஇயபோது, “குறுகிய காலத்தில் கணிசமான படங்களை கொடுத்து, வெற்றியை கண்டவர் சுசீந்திரன். எனது நாவலை படித்துவிட்டு, அதை அழகர்சாமியின் குதிரை என்ற படமாக மாற்றினார். வள்ளி மயில் திரைக்கதையை வெகுநாட்களாக பேசிக்கொண்டிருந்தோம். கடுமையான உழைப்பில் உருவான கதை ‘ வள்ளி மயில்’. இந்த திரைப்படம் திரைத்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நிச்சயம் பிடித்தபடமாக இருக்கும்.”என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் ராதிகா , “இந்த படம் 80 காலகட்டத்தில் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம்.”என்றார்.
கலை இயக்குனர் உதயகுமார் , “பீரியட் படம் பண்ணுவது சவாலான விஷயமாக இருக்கும். ஒவ்வொரு கலை இயக்குனருக்கும் பீரியட் படம் பண்ண வேண்டுமென்பது கனவு. எனக்கு இந்த படத்தில் அது நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் குழுவாக சேர்ந்து பெரும் உழைப்பை கொடுத்துள்ளோம். “என்றார்
பாடலாசிரியர் விவேகா , “இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். விஜய் ஆண்டனி சார் கதாநாயகன் ஆன பிறகு, நான் அவருக்கு எழுதும் முதல் பாடல். இந்த படத்தின் பாடல்கள் பிரமாதமாக வரும். “என்றார்.
நடிகை கனி , “நிறைய நுணுக்கமான விஷயங்களை திரையில் கூறுபவர் சுசீந்திரன். எனக்கு பீரியட் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டேன்.”என்றார்.
நடிகர் தயாளன், “இயக்குனர் உடன் பணிபுரிந்த அனுபவம், எங்களுக்கு பெரிய பொறுப்புணர்வை கொடுத்தது. அவருடைய அர்ப்பணிப்பு எங்களையும் ஊக்கப்படுத்தியது. படம் கண்டிப்பாக பிடித்தமான ஒன்றாக இருக்கும். “என்றார்.
நடிகை அறந்தாங்கி நிஷா , “சில படங்கள் பண்ணி இருந்தாலும், காமெடி கதாபாத்திரத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ள, எனக்கு பெரிய வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. கலைஞர்களின் பரிந்துரைகளுக்கு மரியாதை கொடுப்பவர் இயக்குநர். எனக்கு அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும். விஜய் ஆண்டனி சார் மற்ற கலைஞர்களை பாராட்டும் குணம் கொண்டவர். தமிழ் சினிமாவிற்கு ஃபரியா எனும் சிறந்த நடிகை இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளார். வள்ளி மயில் திரைப்படம் நாடக கலைஞர்களை போற்றும் ஒரு படமாக இருக்கும். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். “என்றார்
நடிகை ஃபரியா அப்துல்லா , “நான் தியேட்டர் கலைஞராக தான் என் பயணத்தை தொடங்கினேன். சுசீந்திரன் உடைய பொறுமை தான், இந்த கதை சிறப்பாக உருவாக காரணம். அவர் என்னிடம் கதை சொல்லும்போதே மியூசிக் எல்லாம் போட்டுக்காட்டினார், நான் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டுள்ளேன். “என்றார்.
இயக்குநர் சுசீந்திரன், “இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்தப் படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்தப் படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. நடிகை கல்பனா உடைய மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார், கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும். “என்றார். விஜய் ஆண்டனி தனது பேச்சில், “இந்த படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் இருந்து நான் இயக்கத்தைக் கற்றுக்கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன், படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றது. அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் கூறிக்கொள்கிறேன்”என்றார். .