இதுவரை தமிழ் சினிமாவில் புழங்காத குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுத் தமிழில் இந்தப் படத்தின் உரையாடல் இருப்பதோடு மொத்தப் படமும் அந்தப் பின்னணியிலேயே எடுக்கப்பட்டு இருக்கிறதாம். திரையுலக மேதையான கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் நாஞ்சில் நாட்டுக்காரர்தான் . அவர் பேசும் முறையில் நாஞ்சில் தமிழ் நமக்கு பரிச்சயம்தான் . (ஜெய் கிருஷ்ணாவும் அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்தான் )
“நாஞ்சில் தமிழை பேச முடியாமல் படபிடிப்பில் சிரமப்பட்டதாக விஜய் சேதுபதி கூறினாரே ? எப்படி சமாளித்தீர்கள்?” என்ற கேள்விக்கு ஜெய் கிருஷ்ணா சொல்லும் பதில் எல்லோருக்கும் தேவைப்படும் ஒன்று
“அடுத்த நாள் எடுக்கப் போகும் காட்சிகளுக்கான வசனங்களை எங்கள் மண் சார்ந்த மாடுலேஷனில் பேசி பதிவு செய்து நடிப்பவர்களுக்கு அனுப்பி விடுவேன் . அதை பல முறை கேட்டு விட்டு அவர்கள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்த போது சரியாகி விட்டது .”
( தப்பான மாடுலேஷனில் வசனம் பேசும் நம்ம அப்பறசண்டி நடிகர்களுக்கு இந்த முறையை எப்போதுமே பயன்படுத்தலாமே )
படத்தின் ஒரு காட்சியில் பாவாடையை மார்பு வரை கட்டிக் கொண்டு குளத்தில் இறங்கிக் குளிக்கும் காட்சியில் படு கவர்ச்சி என்று கூறி நடிக்க மறுத்தாராம் சுனைனா . பின்னர் அது நேட்டிவிட்டியான விஷயம் என்று கூறி நடிக்க வைத்தார்களாம் . (குத்தாட்டத்துக்கு போடற டிரெஸ்களை விடவா அது கவர்ச்சி ?)
