தூக்குத் தண்டனை கைதி ஒருவன் விடுதலையாகி வருகிறான் . அவனை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை சொல்லும் வகையில்
நீதிபதி மூ. புகழேந்தி என்பவர் எழுதிய நாவல் வேதமானவன் (தமிழ்க் கவிதைகள், ஆங்கில- தமிழ் நாவல்கள் உட்பட 22 நூல்களை எழுதியுள்ளாராம் இவர் )
சமுதாயத்துக்கு நல்ல கருத்துகளை வலியுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் உருவான நாவலாம் இது .
அந்த வேதமானவன் நாவலை இப்போது அவரே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் என்ற,
நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வேதமானவன் என்ற பெயரையே படத்துக்கும் வைத்து இயக்கி இருக்கிறார் .
மனோஜெயந்த் என்ற புதியவர் நாயகனாகவும், மத்தியப் பிரதேசத்து மாடல் அழகி ஊர்வசி ஜோஷி ( மொத்தப் பிரதேசமும் ஒகே) நாயகியாகவும் நடிக்க,
டெல்லிகணேஷ், பெஞ்சமின், போண்டாமணி , முளையூர் சோனை, வசந்தராஜ் ஆகியோர் உடன் நடித்திருக்கிறார்கள் .
ஒளிப்பதிவு கண்ணன் . இசை சவுந்தர்யன், நடனம் ராதிகா
”சஸ்பென்ஸ் , காதல் , வீரம், சோகம், நகைச்சுவை சேர்த்து இயக்கி இருக்கிறேன்… ” என்கிறார் .
”பார்த்தது ஒரு பார்வை ‘ என்று துவங்கும் காதல் பாடல், ”பெண்ணாசை மாமன்களா.. ” என்ற குத்துப் பாடல் ,
” அம்மா செல்ல அம்மா … ” என்று துவங்கும் தாய்ப்பாசப் பாடல்களை எழுதி இருக்கிறார் நீதிபதி
இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட இந்த பாடல்களில் ”பெண்ணாசை மாமன்களா …. “பாடல் ஈர்த்தது .
விழாவில் ஒய்வு பெற்ற நீதிபதி மோகன், பாக்யராஜ், அபிராமி ராமநாதன் , ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்