வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் @ விமர்சனம்

velai 11எழில் மாறன் புரடக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, , ரவி மரியா, ரோபோ ஷங்கர்  நடிப்பில், 

இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் . ரசனைன்னு வந்துட்டா இவன் யார் ? பார்க்கலாம் .  

அமைச்சர் ஒருவரிடம் (விட்டல்) பாராட்டுப் பெறுவதற்காக , 25 ஜோடிகளுக்கு கட்சி சார்பில் சீர் வரிசைகளோடு இலவச திருமணம் செய்து வைக்க வேண்டிய வேலை,  ஒரு எம் எல் ஏவுக்கு (ரோபோ ஷங்கர் ) வருகிறது .

அவசரத்துக்கு நிஜமான பொண்ணு மாப்பிள்ளைகள் கிடைக்காத நிலையில் கரகாட்டக்காரி புஷ்பா (ரேஷ்மா பசுபலேட்டி ) உள்பட பல தில்லாலங்கடிகளை மணப் பெண்களாக செட்டப் செய்கிறார்கள் . 

எம் எல் ஏ வுக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்று எண்ணும் கோஷ்டி அரசியல் புள்ளி  ஒருவன் (ஆடுகளம் நரேன்),   ஆள் அனுப்பி மாப்பிள்ளைகளை கடத்தி விடுகிறான் . 

velai 13

கல்யாணம் நடக்காவிட்டால்  அமைச்சரின் அதிருப்திக்கு எம் எல் ஏ ஆளாக வேண்டி வரும் என்பதால் ,  உடனடியாக மாப்பிளைகளை செட்டப் செய்ய வேண்டிய நிலைமை !

 எம் எல் ஏவுக்கு உதவுவதற்காக ,  வந்தவன் போனவனை எல்லாம் மாப்பிள்ளையாக பிடித்துப் போடுகிறான் , எம் ஏல் ஏ யின் விசுவாசியான முருகன்  (விஷ்ணு விஷால்)

அப்படியும் ஆள் போதாத நிலையில் , (நிஜ ) கல்யாணம் நிச்சயமாகி பத்திரிகை கொடுத்துக் கொண்டு இருக்கும் தன் நண்பன் ஒருவனையும் (சூரி) ‘  ஒரு மணி நேர நடிப்புதான் ” என்று கூறி  மாப்பிள்ளையாக அழைக்கிறான் . 

திருமணச்  சீராக கிடைக்கவிருக்கும் ஒரு பவுன் மோதிரத்துக்கு ஆசைப்பட்டு அவனும் வருகிறான். ஆட்டக்காரி புஷ்பாவின் ஜோடியாக நிறுத்தப்படும் அந்த,  

கல்யாணம் நிச்சயம்மான  நண்பன்,  டென்ஷனில் புஷ்பாவுக்கு நிஜமாகவே தாலி கட்டி விடுகிறான் . 

velai 12

இலவச கல்யாணத்தை படம் பிடிக்க வந்த பத்திரிகை போட்டோகிராபர்கள்,  சரியாக அவன் தாலி கட்டும் புகைப்படத்தை பேப்பரில் முதல் பக்கத்தில் போட…

அது பேஸ் புக் வரை போய் ஆயிரக்கணக்கில் லைக்ஸ் வாங்க , பத்திரிக்கை கொடுத்துக் கொண்டிருந்த நிஜக் கல்யாணம் நின்று போகிறது . 

நிஜ மணப்பெண்ணிடம் அவன் நடந்ததை சொல்ல , அந்த பெண்ணோ “நீ புஷ்பாவிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வந்தால் நா ன் உன்னை கல்யாணம் பண்ணிகறேன் ” என்கிறாள் . 

 மாநிலம் விட்டு மாநிலம் போய் கரகாட்டம் ஆடும் புஷ்பாவை தேடுகிறான் மாப்பிள்ளை . ஒரு வழியாக புஷ்பவைக் கண்டு பிடித்துப் பேச,

“நீ நிஜத்தில் எனக்கு தாலி கட்டி விட்டாய். அதனால் ஒழுங்கா வந்து குடும்பம் நடத்து” என்கிறாள் புஷ்பா .

velai 9

தவிர , அந்த ஏரியாவில் உள் எல்லா ஆண்களும் புஷ்பாவைப் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கும்  நிலையில் , அவர்களிடம் இருந்து புஷ்பா புருஷன் என்ற வகையில் ,

தனக்கு கிடைக்கும் வில்லங்கமான மரியாதையும் , விவகாரமான பிரபலமும் வேறு,   பாடாய்ப்படுத்துகிறது . 

எனவே எம் எல் ஏ வை வைத்து புஷ்பாவை மிரட்டி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கித் தரவேண்டும் என்று முருகனிடம் கேட்கிறான் அந்த ‘புஷ்பா புருஷன் ‘ 

இது இப்படி இருக்க  டீக் கடைக்காரர்  ஒருவர் (‘தவசி’ ஞானவேல் ),  சப் இன்ஸ்பெக்டர் டிரைனிங் முடித்து இருக்கும்  தன் மகள் அர்ச்சனாவுக்கு   (நிக்கி கல்ராணி) வேலை வாங்கித் தரவேண்டும் என்று ,

முருகனிடம்  பத்து லட்ச ரூபாய் பணத்தை , அர்ச்சனாவுக்குத் தெரியாமல் தருகிறார் . அவனும் அதை எம் ல் ஏ விடம் கொடுக்கிறான் .  

ஆனால் அர்ச்சனாவுக்கு  முறைப்படியே போஸ்டிங் கிடைத்து விட,  பத்து லட்ச ரூபாய் விசயம் அறிந்த அவள் முருகனிடம் பணத்தைக் கேட்க,

velai 10

இரண்டு நாட்களுக்குள் பணத்தை எம் எல் ஏ விடம் வாங்கித் தருவதாக சொல்கிறான் முருகன் 

இன்னொரு பக்கம்,   உடல்நலம் பாதிக்கப்படும் அமைச்சர் தன்னுடைய ஐநூறு கோடி ரூபாய் கருப்புப் பணம் இருக்குமிடத்தை எம் எல் ஏவிடம் சொல்லி விட்டுச் சாகிறார் .

எம் எல் ஏ விடம் இருந்து அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு அந்தப் பணத்தை சுருட்ட முயல்கிறான் , அமைச்சரின் மச்சான் (ரவி மரியா ).

இந்த நிலையில் ஒரு விபத்தில் சிக்கும் எம் எல் ஏ தலையில் அடிபட்டு பத்து வயதுக்குப் பின் நடந்த சம்பவங்களை எல்லாம் மறந்து விட,  அப்புறம் என்ன நடந்தது என்பதே …. 

இந்த வேலைன்னு வந்துட்டா  வெள்ளைக்காரன் .

எதிர்பாராத விதமாக புஷ்பா புருஷன் ஆகும் சூரி காமெடியை , சுவாரஸ்யமாக , கவனமாக , போர் அடிக்காமல் , சலிப்பு வராமல் , முடிந்தவரை அதிகமாக கடைசிவரை கொண்டு போய்,  

velai 14

ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் , தனது அனுபவம் காரணமாக எழில் அமைத்து இருக்கும் நேர்த்தியான திரைக்கதைதான்  இந்தப் படத்தின் முதல் பலம் . 

அதே போல ராத்திரி பத்து மணிக்கு நடந்த விசயத்தைக் கேட்டாலும் காலை ஆறு மணிக்கு எழுந்தது முதல் நடந்ததை எல்லாம்  விலாவரியாக சொல்லி விசயத்துக்கு வழக்கத்துக்கு வரும் எம் எல் ஏ கேரக்டர் , 

தலையில் அடிபட்டு பத்து வயதுக்குப் பின் நடந்த சம்பவங்களை எல்லாம் மறந்து கலாட்டா செய்து குணமான நிலையில் , 

அவரை அடைத்து வைக்கும் அமைச்சரின் மச்சான் 500 கோடி பணம்  பற்றிக் கேட்க, அன்று காலை ஆறு மணி முதல் நடந்த விசயங்களை எல்லாம் சொல்ல ஆரம்பிக்கும் எம் எல் ஏ , 

கேட்பவர்களில் யாராவது ஒரு வார்த்தை பதில் பேசி விட்டாலும் கூட, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து……அமைச்சரின் மச்சானை தொடர்ந்து கதற  விடுவது,  அந்த திரைக்கதை பலத்தின் சிகரம் . 

velai 6

இப்படியாக தீம் மியூசிக் போல அமைந்த தீம் காமெடியை சிறப்பாகக் கையாண்டு காமெடி சிக்சர்களாக அடித்து  நொறுக்கிய வகையில்,

 Captain Of The Ship ஆக மட்டுமல்லாது Man Of The Movie ஆகவும் ஜொலிக்கிறார் இயக்குனர் எழில் .  எழிச்சூர் அரவிந்தனின் வசனங்கள் அதற்கு நல்ல துணையாக இருந்துள்ளன . 

சத்யாவின் இசையில் ‘பப்பர மிட்டாயி’ போன்ற பாடல்கள் சிறப்பு . பின்னணி இசையில் அந்தக் கால பாணியிலான இசைத் துணுக்குகளை எல்லாம் கொடுத்து நகைச்சுவைக்கு பலம் சேர்க்கிறார் சத்யா . சபாஷ் . 

சக்தியின் ஒளிப்பதிவில் அழகியல் , வண்ண மயம, குளுமை , தெளிவு போன்றவை சிறப்பாக வந்துள்ளன . 

சபாஷ் விஷ்ணு விஷால் ! இதுவரைதான் நடிக்காத பாணியில் பந்தாவாக ஓப்பனாக டாமினேட்டிங் ஆக நடித்து , பி அண்ட் சி ஏரியாவில் இறங்கி இருக்கிறார் . முதல் முயற்சியே  வெற்றி . 

velai 5

புஷ்பா  புருஷன் கேரக்டரை அப்படி உள்வாங்கி ரசித்து லயித்து நடித்து அசத்தி இருக்கிறார் சூரி . நடிப்பிலும் அவ்வளவு முன்னேற்றம். சபாஷ் . 

பத்து வயது பக்குவத்துக்குப் போவது.. குணமான பிறகு ஒவ்வொரு முறையும் சொல்ல வரும் சம்பவத்தை காலை ஆறு மணி முதல் ரிப்பீட் அடிப்பது ..

Velainu Vandhutta Vellaikaaran Movie Stills

என்று  நகைச்சுவை அதகளம் செய்து இருக்கிறார் ரோபோ ஷங்கர் . அருமை . 

காமெடிக்காக கோணங்கி சேட்டைகள் செய்து சிரிக்க வைப்பது வேறு . ஆனால் தான் சீரியசாக இருந்து கொண்டு படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பது கஷ்டம் .

ஆனால் இந்தப் படத்தில் அந்தக் கஷ்டமான வேலையை அனாயாசமாக செய்து இருக்கிறார்  ரவி மரியா . 

இளமைக்கும் அழகுக்கும் நிக்கி கல்ராணி ! 

velai 7

பாடல்கள் நன்றாகவே இருந்தாலும் நன்றாகவே  படமாக்கப்பட்டு இருந்தாலும் கூட , பாடல்களுக்கான சூழல்கள்  காரணமாக நெளிய வைக்கிறது . 

கயத்தூர் பங்காளவில்  வரும் அந்த காட்சிகள் ஒரு பாடலுக்கு உதவுகிறதே தவிர , பெரிதாக பலன் தரவில்லை . இன்னொரு பிளாக் பபஸ்டர் காமெடி ஏரியாவிலேயே படத்தைக் கொண்டு போயிருக்கலாம் . 

கடைசியில் கல்யாண மண்டபத்தில் அய்யர் சூரியிடம் சட்டென்று அந்த கேள்வியை கேட்டு இருந்தால் நகைசுவை வெடி வெடித்து இருக்கும் .

ஆனால் அவர் மீண்டும் மீண்டும் யோசிக்கும்போதே என்ன கேட்கப் போகிறார் என்பது புரிந்து விட்டதே !

ஆனாலும் என்ன ? 

பெரிதாக புதுமையோ சிறப்போ இல்லாத சல்லிசான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நகைச்சுவையில் பின்னிப் பெடல் எடுத்து , 

Velainu Vandhutta Vellaikaaran Movie Stills

விஷ்ணு விஷாலும் எழிலும் தயாரிப்பாளர்களாகவும் ஜெயித்து இருக்கிறார்கள் . 

மொத்தத்தில், 

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் … சினிமான்னு வந்துட்டா காமெடிக்காரன் 

 

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →