ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்க, பிரபு சூரி, முகேன், மீனாட்சி கோவிந்தராஜன், பரியா வின்சென்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பெராடி, ப்ரிகிடா நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கவின் இயக்கி இருக்கும் படம் வேலன்,
ஊர்ப் பெரியவர் பழனிச்சாமியின் (பிரபு) மகன் வேலன் ( முகேன்) ஒழுங்காகப் படிக்காததோடு பள்ளியில் ரவுடித்தனம் செய்வதால் அப்பாவின் கோபத்துக்கு ஆளாகிறான் .
ஒரு வழியாக கல்லூரிக்குப் படிக்கப் போன இடத்தில் ஒரு மலையாளப் பெண்ணை ( மீனாட்சி கோவிந்தராஜன்) காதலிக்கிறான் .
அவன் எழுதிய மலையாளக் கடிதம் , காதலிக்குப் பதிலாக வேறொரு மலையாளப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்டதாகப் புரிந்துகொள்ளப்பட ,
அந்த வேறொரு பெண்ணின் அப்பா ,( தம்பி ராமையா) பழனிச்சாமியை சந்தித்து நியாயம் பேசி தன் மகளுக்கே வேலனை நிச்சயம் செய்து விடுகிறார் .
பழனிச்சாமி மீது சிறு வயது முதல் வன்மப் பகை கொண்டு இன்று அரசியல்வாதியாக உயர்ந்திருக்கும் ஒருவரின் ( ஹரீஷ் பெராடி) எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அந்த திடீர் சம்மந்தியும் ஒரு நிலையில் பழனிச்சாமியை அவமானப் படுத்த , நடந்தது என்ன ?
வேலனின் உண்மைக் காதல் என்ன ஆனது என்பதே வேலன்.
பிரபு, நாயகன் முகேன் ஆகியோர் பாந்தமாக இருக்கிறார்கள் . குடும்பப் பாங்கான காட்சிகள் சிறப்பு. வசனம் நன்றாக இருக்கிறது.
சூரி இரண்டாம் பகுதியில் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
யதார்த்தத்தில் எளிதாக முடிய வேண்டிய பிரச்னையை சினிமாவுக்காக சலுகையையும் தாண்டி இழுக்கிறார்கள் . அதுதான் குறை