ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் நிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்க, ரெட்டசுழி, 16, தா ஆகிய படங்களில் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவரும் திணறல் என்ற மலேசிய தமிழ்ப் படத்தை இயக்கியவருமான உதயா ராமகிருஷ்ணன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் “வெள்ளை உலகம்”
கதாநாயகனாக ரோஷன் நடிக்க கதாநாயகிகளாக ஐரின், காவ்யா இருவரும் நடித்துள்ளனர்.வில்லியாக பொம்மி என்கிற பெண் அறிமுகமாகிறார். தவிர படத்தில் அப்புக்குட்டி, தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், சம்பத்ராம் மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் வெங்கடேசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
காதல் விசயத்தில் சாதி என்ற உணர்வு எந்த அளவு அரசியல் செய்கிறது என்பதை சொல்லும் படமாம் இது
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், இயக்குனர் பாக்யராஜ், நடிகர் ராதா ரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் முதலியோர் கலந்து கொண்டனர்.
வெள்ளை உலகம் என்ற பெயரை வெகுவாக பாராட்டி தமொழில் பெயர் வைக்கப்படவேண்டும் என்று வற்புறுத்திப் பேசினார் பிரபஞ்சன் .
நல்ல கதைகள் கொண்ட படங்கள் வர வேண்டும் என்றார் பாக்யராஜ் .
ராதாரவி பேசும் போது “இப்போ எல்லாம் பாடல்களில் தமிழ ரொம்ப கஷ்டப்படுது . எழுதறவனுக்கும் ஒற்றுப் பிழை, சந்திப்பிழை தெரியல. பாடுறவனுக்கும் தெரியாததால அவன் தமிழைக் கொல்றான் . ஒரு முறை தந்தை பெரியார் சொன்னார் “என்கிட்டே இருந்த ரெண்டு அறிவாளிகள் அண்ணாவும் எம் ஆர் ராதாவும்தான். அப்படின்னு. அதுக்காக மொழியே தெரியாம பாட்டு எழுதினா எப்படி ?”‘ என்றார் .
பவர் ஸ்டார் சீனிவாசன் தனது பேச்சில் “ஆரம்பத்தில் சில படங்கள் நடித்த பின்னர் நான் வில்லனாக நடிக்கலாம் என்று நினைத்து ராதாரவியிடம் ஆலோசனை சொன்னேன். அவர்தான் ‘ நீ காமெடி பண்ணு . உன் முகத்துக்கு அது பொருத்தமா இருக்கும்னு சொன்னேன் . ஆக, என்னைக் காமெடியன் ஆக்கியது அவர்தான் . எனக்கு பவர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்தது விடுதலை சிறுத்தைகள் திருமா வளவன் ” என்றார் .
அப்படியா சங்கதி ?