வெற்றியை நோக்கி ‘வெண்நிலா வீடு’

stills of vennla veedu

சரியானவர்கள் சரியான விஷயத்தை சரியாக செய்யும் போது அது சரியாகவே வரும் என்பார்கள். அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கும் படமாகஇருக்கிறது வெண்நிலா வீடு .

வெண்நிலா வீடு ?

www.nammatamilcinema.com
காதல் வானம் 

  விளம்பர யுக்தி மூலம் பல வெற்றிப் படங்களுக்கு துணை நின்ற கிராப்ட்  அட்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக  உருவாகி இருக்கும் தி வைப்ரண்ட் மூவீஸ் சார்பில் வெங்கடேஷ் ராஜா பிரம்மாண்டமாக உற்சாகமாக வெளியிட ,

 ஆதர்ஷ் ஸ்டுடியோ சார்பில் என்ஜினீயர் பி.வி.அருணின் தயாரிப்பில் வெற்றிமகாலிங்கம் இயக்கத்தில் உருவாகி,  அடுத்த மாதம் திரையரங்கு எனும் வெள்ளித் திரை வானில் தவழ இருக்கும் படம்தான் வெண்நிலா வீடு .

மிர்ச்சி செந்தில் , விஜயலட்சுமி , மலையாள சினிமாவின் பிரபல நாயகி சிருந்தா ஆசாப், இவர்களோடு வழக்கு எண் படத்தில் வில்லத்தனமான ‘கன்னிங்’ போலீசாக வந்த முத்துராமன், பிளாக் பாண்டி, ‘சுப்பிரமணியபுரம்’ சித்தன், ‘அவன் இவன்’ ராம்ராஜ் என்று பெரிதும் பாராட்டப்பட்ட பல குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கும் இந்தப் படம்….

www.nammatamilcinema.com
இருட்டு நிலா

தொலைக்காட்சித் தொடர்களில் சிக்கிக்கொண்ட தாய்க்குலத்தை நீண்ட இடைவெளிக்கப் பிறகு தியேட்டருக்கு இழுத்துவரும் வடக் கயிறோடு கிளம்பி இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.  அதை,  இந்த படக் குழு ஒரு சோறு பதமாக சோதித்துப் பார்த்துவிட்டு சந்தோஷத்தில் சொக்கிக் கிடக்கிறது .

www.nammatamilcinema.com
குDDDDடும்பம்

அந்த செய்த சோதனை என்ன என்று பார்ப்பதற்கு முன் அவர்கள் சொல்வது சரிதானா என்பதை உணரும்படியாக,  இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்று நாமே பார்த்து விட்டால் போச்சு . சரிதானே? .

நடுத்தரக் குடும்பத்து பிரச்னையை,  ஜிகினா சேர்க்காமல் யதார்த்தமாக… அதே நேரம் உயிரோட்டமாக சொன்னால்,  அது கைவிடாது என்பது தமிழ் சினிமாவின் தங்கமயமான விதி. உலகத்தரமான பசை எதையோ கையில் பூசிக் கொண்டு,  அந்த விதியை  கெட்டியாக ஒட்டிப் பிடித்துக்  கொண்டு இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.

வளமை பாதி வறுமை பாதி என்று,  மாறி மாறி வாழ்க்கை மாய வித்தை காட்டினாலும்,  சுயமரியாதைக்கும் மன சாட்சிக்கும் இன்னும் முக்கிய இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் பிரதிபலிப்பாக உருவாகி வந்திருக்கும் இந்தப் படத்தில்,  இன்னும் சமூகத்தில் முக்கிய விசயமாக , பிரச்னையாக நிகழ்ந்து கொண்டிருக்கிற,  ஆனால் இதுவரை யாரும் தொடாத  ஒரு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் .

www.nammatamilcinema.com
அடி…மனசு ! மனசு!!

பொதுவாக நடுத்தர வர்க்க குடும்பங்களில் கல்யாணங் காய்ச்சிக்கு போகும்போது பக்கத்து வீட்டுப் பெண்களின் நகைகளை இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டு போவது சகஜமான ஒன்று . (கழுத்தில் இருப்பது ஒரிஜினல் தங்க நகையா இல்லை கவரிங்கா என்று ஒரு நொடிப் பார்வையில் கண்டு பிடிப்பதில் இந்த நடுத்தர வர்க்கப் பெண்கள் கில்லாடிகள் . கோடி கோடி ரூபாய்க்கு நகை  வைத்திருக்கும் செல்வச் சீமாட்டிகளுக்கு கூட இல்லாத திறமை இது !)

அப்படி இரவல் நகையை வாங்கிக் கொண்டு போய் அந்த நகை தொலைந்து போனால்…. அல்லது ”தேய்ஞ்சு போச்சு..”, இல்ல இல்ல..” ஒரு குண்டுமணி குறைஞ்சு போச்சு” அல்லது ”என் நகையை அவளுக்கு எப்படி தரலாம் ?” அதுவும் இல்லையா? “ஓசி நகை என்பது தெரிஞ்சு மானம் போச்சு” இத்யாதி இத்யாதி விசயங்களால் வரும் பிரச்னைகளால்……குத்துக் கொலை,  குலப் பகை  வரை  போவதும் உண்டு .

அப்படிப்பட்ட இரவல் நகை விசயத்தையும் அடகுக் கடைக்காரர்களின் ‘தொழில் நியாயத்துக்கு’ இடையில் நடுத்தரத் குடும்பப் பெண்கள் சிக்கி தடுமாறுவதையும் கொதிக்கக் கொதிக்கப் படமாக கொடுத்து இருக்கிறர்களாம். அடகுக் கடைக்காரர் வேடத்தில் நடிப்பவர்தான் வழக்கு எண் போலீஸ் முத்துராமன்.

www.nammatamilcinema.com
டி..டி..டி..நெத்தி இடி

“கிராமத்தில் இருந்து வந்து நகரத்தில் செட்டில் ஆகும் தம்பதியின் ஈர்ப்பான காதல் வாழ்வில்,  இந்தப் பிரச்னைகள் சிக்கல்களை கோர்த்திருக்கும் அதே நேரம்…. முதல் பகுதி முழுக்க நேரடிக் காமெடிகளும் இரண்டாம் பகுதியில் ‘கேரக்டர்கள் சீரியஸ்… ஆனா ஆடியன்சுக்கு காமெடி!’என்ற பாணியில் காமெடிகளும் இருக்கிறது . வல்லினம் படத்துக்காக தேசிய விருது வென்ற சாபுஜோசப்பின் படத் தொகுப்பு இந்தப் படத்துக்கு பெரும் பலம் ” என்கிறார் இயக்குனர்

வெண்நிலா வீடு படத்தின்  Promo பாடலான ”ஜானி ஜானி வா மாமா” பாடல் யூ டியூபில் இதுவரை பத்துலட்சம் ரசிகர்களால் பார்க்கப்பட்டிருகிறது . ஆரமபத்தில் இதை Promo பாடலாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள படக்குழு முடிவு செய்திருக்க, பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்த விநியோகஸ்தர்கள் இந்தப் பாடலை படத்தில் வைத்தாக வேண்டும் என்று வற்புறுத்தியதால் படத்துக்குள்ளும் நுழைந்து விட்டது அந்தப் பாடல்.

  அது மட்டுமல்ல .. இந்தப் பாடலில் நட்புக்காக சிவ கார்த்திகேயன் நடித்திருக்கிறார் .அவரோடு உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணா, வெங்கட் பிரபு , பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளார்கள் .

www.nammatamilcinema.com
இது ஃபேமிலி ஷோ

படத்தின் தரத்தை ஒரு சோறு பதமாக சோதித்துப் பார்த்துவிட்டு படக்குழு சந்தோஷத்தில் சொக்கிக் கிடக்கிறது  என்று சொன்னோம் அல்லவா?அது என்ன சோதனை ?

படம் முழுக்க தயார் ஆன உடன் பல்வேறு ஊர்களில் இருந்தும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள் ஐம்பது பேரை கொண்டு வந்து படத்தை திரையிட்டுக் காட்டினார்களாம். படம் பார்த்து முடித்த பெண்கள் எல்லோரும்,  படம் போட்டுக் காட்டியவர்களை பற்றிக் கவலையே படாமல்… அவர்களுக்குள் “இது எங்க ஊருல நடந்துது .. இது எங்க தெருவுல நடந்தது .. அட .. இது எங்க வீட்டுலயே நடந்ததுங்க.. என்று தங்களுக்குள் ஒரு இன்ஸ்டன்ட் விவாத மேடையே வைத்துக் கொள்ள …

அப்போதே,  ‘ஆகா…படத்துக்கு வெற்றி உறுதி!’ என்று புரிந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறது படக் குழு .

“எல்லாம் சரி.. பொதுவாக வெண்ணிலா வீடு என்று தானே சொல்வார்கள் . அது ஏன் வெண்நிலா வீடு என்று பெயர் போடுகிறீர்கள்?” என்று கேட்டால் “வெண்ணிலா வீடு போன்ற ஓர் அழகிய குடும்பத்துக்குள் ஒரு சிறு தவறு நடந்தால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை . அந்த தவறைதான் வெண்நிலா என்ற எழுத்துகள் குறிக்கிறது” என்கிறார் இயக்குனர்

www.nammatamilcinema.com
பாதுகாப்பு..கழுத்து நகைக்கு !

 

www.nammatamilcinema.com
கிச்சன் சிக்கன்ஸ்

“எனக்கு இதுவரை பெரிதாக சினிமா ஆர்வம் எதுவும் கிடையாது சார். ஆனா , இந்தக் கதையைக் கேட்ட உடனே வாழ்க்கைக்கு நெருக்கமா இருக்கறது புரிஞ்சது.

தயாரிக்க முடிவு பண்ணிட்டேன் .

தொடர்ந்து வாழ்க்கையை பேசும் படங்களையே தயாரிக்க இருக்கிறேன் ” என்கிறார் தயாரிப்பாளர், ஆதர்ஷ் ஸ்டுடியோ பி.வி.அருண் .

“கமர்ஷியல் படங்களை மட்டுமல்ல.. நல்ல கதை அம்சம் உள்ள சிறு பட்ஜெட் படங்களையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவோம் ” என்கிறார் வைப்ரண்ட் மூவீஸ் வெங்கடேஷ் ராஜா .

கொஞ்சம் பெரிய கட்டுரைதான் என்றாலும் .. பரவாயில்லை இப்போது மீண்டும் ஒரு முறை முதல் வாக்கியத்தை படித்து விடுங்கள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →