ஈழத் தமிழர் வில்லனாக நடிக்கும் “வேறென்ன வேண்டும்?”

ஏ எம் ரெட்கார்பெட் பிலிம்ஸ் மற்றும் எஸ் எஸ் என்டர்டைன்மென்ட் சார்பில்

அனுமணி, சுப்பிரமணி மற்றும் சல்லா திம்மா ரெட்டி தயாரிக்க, நரேன் ராம் தேஜ், பிரேர்னா கண்ணா,  தர்ஷன் சந்த் நடிப்பில்

சிவபார்வதி குமாரன் இயக்கி இருக்கும் படம் வேறென்ன வேண்டும் .  படத்தின் இசை அமைப்பாளர் பிரேம் குமார் சிவ பெருமான், ஏ ஆர் ரகுமான் இசைப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் . 

படத்தின் வில்லனாக நடித்திருக்கும் தர்ஷன் ஈழத் தமிழர் .

(”அப்பா சென்னை அம்மா ஈழம்” என்கிறார்)

 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பேரரசு, வெங்கட்  ஏ ஆர் ரைஹானா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். 
 
படத்தின் முன்னோட்டமும் மூன்று பாடல்களும் திரையிட்டனர்.  முன்னோட்டமும் பாடல்களும் இனிமை .
பிரேம் குமார் சிவ பெருமானின் இசையில் பாடல்கள் இனிமை கேமில் ஜே அலெக்சின் ஒளிப்பதிவும் நன்றாக இருந்தது 
 
பாவன் மித்ரா என்பவர் மூன்று பாடல்களும் இணை இயக்குனர் சாந்த குமார் ஒரு பாடலையும் எழுதி உள்ளனர் . 
 
முழுக்க முழுக்க காதல் படம் ! 
“ஆனால் மக்களுக்கு தேவையான ஒரு சமூக அக்கறை விஷயம் வைத்துள்ளோம் ” என்றார் இயக்குனர் சிவபார்வதி குமாரன் .
 
படப்பிடிப்பில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்  இணை இயக்குனரும் தமக்கு மிக உதவியாக இருந்தார்கள்”
என்று நரேன் ராம் தேஜ், பிரேர்னா கண்ணா,  தர்ஷன் சந்த் ஆகியோர் குறிப்பிட்டனர் . 
 
“படத்தின் நாயகன் நாயகி வில்லன் மூவருமே திறமை சாலிகள் . தர்ஷனும் விரைவில் ஹீரோ ஆவார் ” – என்றார் சாந்த குமார் 
 
ஆடி பாடி ஓடுவோம் அத்து மீற மாட்டோம் ” என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசிய ஒருவர் , “அத்து மீறினால் அப்புறம் மீ டூ வில் மாட்டணும் ” என்று கூற,
பேரரசு பேசும்போது , “ஆடிப் பாடவும் வேணாம் . அத்து மீறவும் வேணாம் . அதுவும் பாடகிகளிடம் கவனமா இருக்கணும் ” என்றவர் ,
தொடர்ந்து , ” இணை இயக்குனரை பாடலாசிரியராகவும் மாற்றிய இயக்குனர் சிவபார்வதி குமாரன் பெருந்தன்மையின் உச்சம் ” என்று பாராட்டினர் . 
 
சாலக்குடி எனக்கு மிகவும் பிடித்த லொக்கேஷன் . அங்கே தான் நான் அர்ஜுனா அர்ஜுனா பாடலை எடுத்தேன் .
இந்தப் படத்தின் பாடலில் அதை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ” என்றார் ஏ. வெங்கடேஷ் . 
 
விழா முடிந்தது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *