ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் R.ரவிந்திரன் தயாரிக்க,
தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.சசிகுமார் கதாநாயகனாக நடிக்க,
மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகள்,
முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகியோர் நடிக்க ,
இயக்குனர் டி.பி. கஜேந்திரனிடம் துணை இயக்குனராகவும், ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் இணை இயக்குனராகவும் பணிபுரிந்த வசந்தமணி,
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் வெற்றிவேல்
பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை வெற்றிகரமாக, வினியோகம் செய்தவர் தயாரிப்பாளர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் R.ரவிந்திரன்
படம் பற்றிக் கூறும் இயக்குனர் வசந்த மணி ” நான் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் கூறினேன் . அவர் கதையை சசிகுமரிடம் கூறி அவர் ஒகே செய்த பிறகே எனக்கு தகவல் சொன்னார்.
பிறகு நான் கதையை விளக்கமான சொன்னேன் .
ஒரு வெற்றிகரமான இயக்குனர் என்ற நிலையிலும் என் கதையை அப்படியே ஏற்றார் . மூன்று இடங்களில் மட்டும் சிறு சிறு திருத்தங்கள் செய்து கொள்ளலாமா என்று கேட்டு, பிறகு செய்யச் சொன்னார்
தம்பியின் காதலுக்கு போராடும் அண்ணன், குடும்ப உறவுகள் மதிப்பீடுகள் இவற்றை தஞ்சாவூர் மண் சார்ந்த பின்னணியில் சொலி இருக்கிறேன் .
காதலையும் குடும்பத்தையும் மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து,
அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுத்து இருக்கிறேன் .
படப்பிடிப்பில் எனக்கு சசிகுமார் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . கேமரா பக்கமே வரமாட்டார் . மிக அரிதான ஷாட்களின்பொது மட்டுமே எடுக்கப்பட்ட ஷாட்டை மானிட்டரில் பார்ப்பார்.
அவரது தன்மை என்னை வியக்க வைத்தது.
தம்பியில் காதலியின் தந்தையாக பக்கத்து ஊர் பெரிய மனிதராக பிரபு அசத்தி இருக்கிறார் ஒத்தாசை என்ற கேரக்டரில் தம்பி ராமையா காமெடியில் கலக்கி இருக்கிறார் இருக்கிறார் .
டி இமான் அற்புதமான பாடல்களைக் கொடுத்து இருக்கிறார்
தஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் படத்தின் படபிடிப்பு நடைபெற்றது..விரைவில் படம் திரைக்கு வருகிறது ” என்கிறார்