மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த்துக்கு அடுத்து கிடைத்த மிக முக்கியமான படம் என்றால் அது ஆள் திரைப்படம்தான் . வேற்று மொழிகளில் வந்த படங்களின் ரீமேக் என்றாலும் ஆள் படம் மிக சிறந்த படைப்பாக வந்த காரணத்தால் நாமும் விமர்சனத்தில் அதை கொண்டாடி இருந்தோம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார் விதார்த்.
அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ஆள் படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
”இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்த ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்”
– என்று உணர்ச்சிவசப்படும் விதார்த், தற்போது சக்கரவர்த்தி ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் நந்து தயாரிப்பில், ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘காடு’ என்ற இன்னொரு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள மலைகிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது.அந்த மலைக்கிராமத்தில் உள்ள வீடுகளுடன் சில வீடுகளை செட் போட்டு காடு படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அது இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் சொந்த ஊர்.
காட்டார்
காடு பற்றி விதார்த் என்ன சொல்கிறார்?
”இந்தப் படம் என் லைஃபில் திருப்புமுனையைத் தரப்போகிற படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மைனா, தற்போது ஆள் படங்களுக்கு ஆதரவு தந்த ரசிகர்கள், காடு படத்துக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார் .
கவலையே படாதீங்க விதார்த் .. மதிக்கத் தெரிந்த உங்களுக்கு காட்டுத்தனமானமான ஆதரவு கொடுக்கப்படும் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462