டார்லிங் 2 படத்தில் ஹீரோவாக நடித்தவர் ரமீஸ் ராஜா .
இவர் தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம்,
மிகுந்த பொருட்செலவில் தயாரித்து , கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘விதி – மதி உல்டா’
ரமீஸ் ராஜாவின் ஜோடியாக ஜனனி அய்யர் நடிக்கிறார் .
இயக்குனர் ஏ ஆர் முருகதாசின் உதவியாளர் விஜய் பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் .
ஒளிப்பதிவு மார்ட்டின் ஜோ . இசை அஸ்வின் .
அது என்ன வித்தியாசமான பெயரில். விதி- மதி உல்ட்டா ?
“மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது.
விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு .
ஒருவேளை அதுவே உல்டாவாக ஆகி விட்டால் என்னென்ன விபரீதம் ஏற்படும் ?
இந்தக் கேள்விக்கான பதிலை,
காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரில்லிங் படமாக உருவாக்கி வருகிறோம் ” என்கிறது படக்குழு .
“படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, கருணாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள் .
முக்கிய கதாபாத்திரங்களில் சென்ராயன், சித்ரா லட்சுமணன் , ஞானசம்மந்தன் ஆகியோர் நடித்து வருகின்றனர்” என்றும் கூறுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் நடக்க,
விறுவிறுப்பும் வேகமுமாக வளர்ந்து வருகிறது, ‘விதி- மதி உல்டா’