
ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்த ஏ வி எம் ஸ்டுடியோ மெல்ல மெல்ல மாறுகிறது.
புகழ் பெற்ற சம்சாரம் அது மின்சாரம் செட், வெளி ஆளுக்கு விற்கப்பட்டு அங்கே ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பே எழுந்தது .
ஏ வி எம் உள்ளே போகும் விரைவில் பொது சாலையாகப் போகிறது என்கிறார்கள்.
ஏ வி எம் ஸ்டுடியோவில் இப்போதும் இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு படப்பிடிப்புத் அப்படியே விற்பனைக்கு வருகிறது என்றும் செய்திகள் வந்தன .
எல்லாவற்றையும் விட ஒரு படி மேலே போய் ,
ஸ்டுடியோவுக்குள் ஏ.வி.எம் சரவணனின் அலுவலகத்துக்கு பக்கத்தில் சுமார் முக்கால் கிரவுண்டு இடத்தை விலைக்கு வாங்கி சொந்தமாக ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோ கட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி.
விரைவில் திரைக்கு வர இருக்கும் சலீம் படத்தின் சில காட்சிகளை அங்கே படம் பிடிக்கிறார் விஜய் ஆண்டனி .
(ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குள் இடம் வாங்க வேண்டும் என்ற விஷயத்தை கமல் ரஜினி கூட யோசிச்சுப் பாத்திருக்க மாட்டாங்கள்ல …?)
Comments are closed.