
முழுப்பெயர் : விஜயகுருநாத சேதுபதி
எப்பப் பாத்தாலும் நீங்க ”நான் நடிகனாவேன்னு எதிர்பார்க்கல …. இந்த அளவுக்கு ஹீரோ ஆவேன்னு கூட பிளான் பண்ணல”ன்னு அடிக்கடி சொல்றீங்க . உங்களோட இந்த ஸ்டேட்மென்ட் , லட்சியத்தோட சினிமாவுல ஜெயிக்க போராடறவங்களை புண்படுத்தாதா? இல்ல…. இப்படி பேசறதும ஒரு ஹீரோயிசமா?
‘ஹீரோயிசமா ?(சிரிக்கிறார்) நான் என் அனுபவத்தை சொன்னேன் . என் அனுபவம் என்பது மற்ற யாருக்கான பாடமும் இல்ல. இப்படிதான் எல்லாரும் நடக்கணும்னும் இல்ல. நான் வந்த வழியை நான் சொன்னேன். அவங்க பாதையை அவங்களே போடட்டும் . லட்சியத்தோடு போராடி ஜெயித்த எத்தனையோ பேர் இருக்காங்களே அவங்களை நினைச்சுகிட்டு அவங்க வரட்டும் . இதையும் மீறி என் ஸ்டேட்மென்ட் அவங்களை புண்படுத்தினா அதுக்கு நான் பொறுப்பு இல்ல . அவங்க மன நிலையில் உள்ள பிரச்னை அது. அதை சரிசெய்து கொண்டு அவங்க ஜெயிக்க எனது வாழ்த்துகள் !