சூரக் கோட்டைன்னா….
தாத்தா பாட்டி
தாத்தா கொடுத்த பாராட்டு ?
வெங்கடாச்சலம்னு ஒரு ஸ்டன்ட் மாஸ்டரை கூப்பிட்டு ‘இந்த பசங்களுக்கு எல்லாம் சிலம்பம் கத்துக் குடுறா’ன்னு தாத்தா சொன்னாங்க . அப்படியே கத்துட்டோம் . ஒரு நாள் நான் சீரியஸா நான் ஒரு நீண்ட வரிசை சிலம்பம் ஆடி முடிச்சதும் ஜன்னலுக்குள் இருந்து கைதட்டல் வந்தது . அப்போதான் தாத்தா அங்க நிக்கறதே தெரிஞ்சது .
பாட்டி கிட்ட ரொம்ப புடிச்ச விஷயம் ?
மனசுல உள்ளதை சட்டுன்னு சொல்லிடுவாங்க . குறைவான மசாலா எல்லாம் போட்டு வேட்டைக் கறி என்ற ஸ்டைல்ல அவங்க சமைக்கிற மட்டன் சிக்கன் டேஸ்ட்டே தனி
ஒரு நடிகரா அப்பாவிடம் பிடிச்ச விஷயம் ?
எல்லோருக்கும் புடிச்ச அப்பாவோட டான்ஸ்தான்
அம்மா எப்போ ரொம்ப திட்டினாங்க ?
சின்ன வயசுல நல்லாதான் படிப்பேன் . ஆனா எக்ஸாம் எழுதும்போது மறந்துடுவேன். அப்போ எல்லாம்தான் திட்டு திட்டா திட்டு விழும்
நீங்க ரொம்ப ஷை டைப்புன்னு வெளிய சொல்றாங்களே …
அதுல பாதிதான் உண்மை . ஷை டைப் பாதி அமைதி பாதி.
அரிமா நம்பி பேரைக் கேட்டதும் …..
அரிமாவுக்கு அர்த்தம் தெரிஞ்சது. நம்பி என்பது ஒரு நல்ல தமிழ் வார்த்தைன்னு புரிஞ்சது. டைரக்டர் சொன்ன கதையை வச்சு அதுவும் புரிஞ்சது . வாரணம் ஆயிரம் பேரு மாதிரி அரிமா நம்பியும் அருமையான தமிழ்ப் பேருல்ல….?