நண்பனுக்கான ‘வில் அம்பு’

IMG_5800
வில் அம்பு திரைப்படத்தின்  சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா, சென்னை   லயோலா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து  வரும் ‘en genia 2k15’ கலை விழாவில் இணைப்பு நிகழ்வாக நடந்தது.

படத்தின் நாயகர்களுள் ஒருவரான ஹரிஷ் கல்யாண் ” இந்த லயோலா கல்லூரியில் மாணவனாக சேர்ந்து படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இந்த கல்லூரியில் சேர வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் எனக்கு இங்கு சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று  நான் நடித்திருக்கும் படத்தின்  பாடல் இங்கே வெளியிடப்படுவதில் மகிழ்ச்சி” என்றார்

” என் பதினான்கு வருட நண்பன் சுசீந்திரன் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கி இருப்பது மகிழ்ச்சி என்றார்  படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்

“வில் அம்பு”  படத்துக்காக  இசையமைப்பாளர் நவீன் இசையில் இசையமைப்பாளர் டி.இமான் பாடியுள்ள  ” நீயும் அடி நானும்” என்ற பாடலை வெளியிட்ட , நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ஜெயம் ரவி பேசும்போது
 ‘IMG_5793
‘நானும் சில வருடங்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் மாணவனாக படித்துள்ளேன் . இதே பெர்ட்ரம் ஹாலில் நிறைய நிகழ்ச்சியில் நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். உங்களை போல் இங்கே அமர்ந்து நானும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறேன்.

இப்போது நான் உங்கள் சீனியராக இங்கே நிற்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . உங்களிடம் நிறைய பேசலாம் என்று தான் வந்தேன் ஆனால் உங்கள் ஆரவாரத்தை பார்த்தவுடன் எனக்கு என்ன பேச வந்தோம் என்றே மறந்துவிட்டது.

நாம் கல்லூரிக்கு வந்து படிப்பில் சாதனை படைப்பது பெரிய விஷயமல்ல.  படிப்பது நம்முடைய கடமை. அதை தாண்டி நாம் என்ன சாதித்தோம் என்பது தான் நமக்கு பெருமை .

இயக்குநர் சுசீந்திரனை போல் நட்புக்கு பெரிய மரியாதை கொடுப்பவன் நான். இந்த படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் , படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சுசீந்திரனின் நெருங்கிய நண்பர் , இருவரும் பதினான்கு வருடங்களாக ஒரே அறையில் தங்கி இருந்தனர். அந்த நட்பை மறக்காமல் இயக்குநர் சுசீந்திரன் தன்  நண்பனுக்காக இந்த படத்தை தயாரித்துள்ளார்.

IMG_5614

இதை போன்ற நட்பை நீங்கள் அனைவரும் கல்லூரி காலத்தில் தவறவிட்டுவிட கூடாது. இயக்குனர் சுசீந்திரனின் மேல் உள்ள மரியாதையின் காரணமாக தான் நான் இந்த விழாவுக்கு வருகை தந்தேன்.

இந்த படத்தில் நடித்துள்ள ஸ்ரீயின் நடிப்பை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நான் நிறைய ரசித்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். படத்துக்கு இசையமைத்துள்ள நவீன் பாடல்கள் அருமையாக உருவாக்கியுள்ளார்.  இது ஒரு நல்ல முயற்சி. இதை போன்ற முயற்ச்சிகள் நிச்சயம் வெற்றி பெறும் ” என்று வாழ்த்தினார் நடிகர் ஜெயம் ரவி. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →