ZEE5 ல் வெளியாகி இருக்கும் “விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, தம்பி ராமையாவும் அவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India கூறியதாவது.
‘தரமான படங்களை தருவதே எங்கள் ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். . மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான். தொடர்ந்து சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். எங்களது தளத்தில் தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திப்படுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்’.

சிஜு பிரபாகரன், Cluster Head, South, ZEE கூறியதாவது.,
‘எங்களது பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே, எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில், குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். . தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் காத்திருங்கள், இன்னும் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன’.

நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது…
‘சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் “விநோதய சித்தம்”. காலத்திற்கு நன்றி’.
தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது
படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான, ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குனர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது.

இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம் கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின் இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் ‘விநோதய சித்தம்’ திரைப்படத்தை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.