கடந்த இரண்டு தீபாவளிகளின் போதும் விஷாலின் படம் ரிலீஸ் ஆனது . இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால் தனது அடுத்த படங்களைப் பற்றி பேசினார்
” பாண்டிராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் கதகளி படம் பெரும்பகுதி முடிந்து விட்டது . கிளைமாக்ஸ் மட்டும் பாக்கி. அது எனக்கு மட்டுமல்லாது பாண்டிராஜூக்கும் புதிய பாணிப் படமாக இருக்கும் .
வெளிவராமல் இருக்கும் மதகஜராஜா படம் வெளிவருமா என்று தெரியவில்லை . வந்தால் மிகவும் சந்தோஷப் படுவேன் .
கதகளி படத்தை அடுத்து கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘மருது’ என்ற படத்தில் நடிக்கிறேன் .
இந்தப் படங்களை அடுத்து ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்க இருக்கிறேன் . அது வாழ்வில் ஒரே முறை மட்டும் செய்ய முடிகிற படமாக இருக்கும் . அது பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவேன் ” என்றார் .
‘இவ்வாறாக, ‘ நடிகர்’ விஷால் பேசி முடித்த பிறகு, அடுத்து ‘நடிகர் சங்கச் செயலாளர்’ விஷால் பேசினார் .
” நடிகர் சங்க இடத்துக்கு எஸ் பி ஐ சினிமாஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்தாகி விட்டது . அண்மையில் கார்த்தி முதலியோர் சரத் சாரை சந்தித்தபோது டாக்குமெண்டை கொடுத்து விட்டார் சரத் சார் .
சங்க நிதி விவகாரம் இன்னும் இருக்கிறது . கணக்கு வழக்குதான் இன்னும் சரி பார்த்து முடியவில்லை. ஆடிட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது .
நடிகர் சங்க இடத்தில் விரைவில் கட்டிடம் எழுப்பப்படும் . அது கமர்ஷியல் காமப்ளெக்ஸ் மாதிரி எல்லாம் இருக்காது . நடிகர் சங்கத்துக்கான கலை மன்றமாகவே அது இருக்கும் .
முக்கிய நடிகர்கள் அனைவரும் நடிக்க ஒரு படம் தயாரிக்கப்பட்டு, அதில் வரும் லாபம் கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் அது சும்மா கடமைக்கு எடுக்கப்பட்ட படமாக இருக்காது . எப்போதும் பார்த்து ரசிக்கும் வெற்றிப் படமாக இருக்கும் . கதை இயக்குனர் எல்லாம் முடிவான பிறகு பொருத்தமான கேரக்டர் இருந்தால் கமல் சார் கூட அதில் நடிப்பார் .”
சரி ‘பேச்சிலர்’ விஷால் என்ன சொல்கிறார் ?
“எப்பவா இருந்தாலும் என் கல்யாணம் லவ் மேரேஜ்தான். ஏன்னா எனக்கு அரேஞ்டு மேரேஜ் செட் ஆகாது . ஆனால் இந்த வருஷமும் கல்யாணம் இல்ல. அடுத்த தீபாவளிக்கும் உங்களை தனி ஆளாத்தான் சந்திப்பேன் “
அட, போங்கப்பா !