காஷ்மீரில் படப்படிப்பு நடந்தபோது மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள் .
காஷ்மீரின் இன்றைய முதல்வர் மெஹபூபா முஃப்தியின் கணவர் தமிழ் நாட்டுக்காரர்தான் .அவர் பட யூனிட்டுக்கு உதவிகளும் பாதுகாப்பும் கொடுத்து உள்ளார் .
அவர்களுக்கு நன்றிகள். ரன்யா மிக அழகான பொண்ணு ” என்றார் .
இயக்குனர் குமார வேல் பேசும்போது ” பொதுவாக காஷ்மீர் போன்ற பகுதிகளை ஜஸ்ட் பின்னணியாக மட்டும் பயன்படுத்துவார்கள் .
ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து அங்கே நிகழும் கதையை படமாக்க விரும்பினேன் .
அப்புறம் பெரும்பாலும் எல்லோரும் ராணுவம் பற்றிய கதையை படம் எடுப்பார்கள் . நான் வித்தியாசமாக எல்லையோர பாதுகாப்புப் படை (பார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸ் ) பற்றி படமாக்க விரும்பினேன் .
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . சகதியிலேயே உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அந்த ஒத்துழைப்பு இருந்தது
ஷூட்டிங் நடந்த போதே ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. . அதை எல்லாம் மீறி படம் எடுத்து முடித்தோம்
படத்தில் காஷ்மீரில் நடக்கும் ஒரு கதைப் பகுதியை, செலவை குறைப்பதற்காக குளு மணாலியில் எடுக்க முனைந்தபோது ,
‘பரவாயில்லை , காஷ்மீருக்கே பொய் எடுங்கள்’ என்று அனுப்பும் அளவுக்கு, தயாரிப்பாளர் தந்த ஒத்துழைப்பு சிறப்பானது ” என்றார்
விக்ரம் பிரபு பேசும்போது “ இயக்குனர் குமாரவேல் கதை சொன்ன போது மலைப்பாகவும் ஆர்வமாகவும் இருந்தது . பொதுவாக ஒரு பிரச்னை வரும்போதுதான் ராணுவம் களம் இறங்கும் .
ஆனால் பார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸ் என்பது என்றும் செயலில் இருக்கும் . இந்த வீரர்களுக்கு ஒழுங்காக ஷேவ் செய்யக் கூட நேரம் இருக்காது . அப்படி ஒரு கேரக்டர் .
காஷ்மீர் மாநில அரசு எங்களுக்கு கொடுத்த பாதுகாப்பு மறக்க முடியாத ஒன்று . படம் மிக நன்றாக வந்து இருக்கிறது ” என்றார்
படத்தை வாங்கி வெளியிடும் காஸ்மாஸ் சிவகுமார் “நாய்கள் ஜாக்கிரதை, ரோமியோ ஜூலியட் , மெட்ரோ வரிசையில் நான் வெளியிடும் அடுத்த படம் இது .
படம் மிக சிறப்பாக வந்துள்ளது . கண்டிப்பாக இது பெரிய வெற்றிப் படம் ” என்றார்