எனக்கு by night என்ற பெயரில் எந்தப் படம் பார்த்தாலும் silk by night படம்தான் ஞாபகம் வரும். அப்போது நமக்கு அமைந்த சூழல் அப்படி .
போலந்தில் வார்சா நகரில் வெள்ளிக் கிழமை இரவில் சூடு பிடிக்கும் இரவு வாழ்க்கையில் துவங்கும் படம் . ஒரு நைட் கிளப்பில் மது பான மேஜையில் மாடியில் காரிடாரில் , ரெஸ்ட் ரூமில் ஒருவரை ஒருவர் ஜஸ்ட் பார்த்துக் கொள்ளும் சில பெண்களைப் பற்றிய கதை
கதையில் பெரிசாக எல்லாம் ஒன்றும் இல்லை . கூடுகிறார்கள் குடிக்கிறார்கள்; , காதலில் தோல்வியுறுகிறார்கள். மறு காதல் பெறுகிறார்கள். அழுகிறார்கள் . சிரிக்கிறார்கள் . சேர்கிறார்கள் பிரிகிறார்கள்
என்ன ஒரு விஷயம் என்றால் ஜஸ்ட் சாதாரணமாக படத்தை ஆரம்பித்தி ரெஸ்ட் ரூமில் பெண்கள் ஒருவரை ஒருவர் ஜஸ்ட் கடப்பதாகக் காட்டி அந்த இடத்தில் ஒரு பெண்ணின் கதையில் இருந்து இன்னொரு பெண்ணின் கதைக்கு திரைக்கதை தாவும் உத்தி (மட்டும்) அபாரம் . அதையும் ” பாத்தீங்களா? வித்தியாசமா சொல்றேன் என்று பீற்றிக் கொள்ளும் ஸ்டைலில் அல்லாமல் கேஷுவலாக சொல்லும் அந்த பெருந்தன்மை சிறப்பு .
மற்றபடி கதை என்று சொல்வதால் எல்லாம் தம்பிடி பிரயோஜனம் இல்லை.
ஒரு வேளை உங்களுக்குப் பிடிக்கலாம் இந்த டிரைலர்